போக்குவரத்து சிக்னல்களுக்கு சிவப்பு மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய நிறங்களை மட்டும் தான் பயன்படுத்துகிறார்கள்.. இது ஏன் என்று தெரியுமா?

ஆரம்பத்தில் ரயில்களுக்கு மட்டும்தான் போக்குவரத்து சிக்னல்கள் இருந்தது. அபரிமிதமான வளர்ச்சி, போக்குவரத்து நெரிசல் போன்ற பல காரணங்களுக்காக தான் சாலைப்போக்குவரத்துக்கும் சிக்னல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் சாலை போக்குவரத்தில் நிற்பதற்கு சிவப்பு நிறமும் செல்வதற்கு வெள்ளை நிறமும் பயன்படுத்தப்பட்டது.தூரத்தில் இருந்து பார்க்கும்போது வெள்ளை நிறம் சரியாகத் தெரிவதில்லை வெயில், பனி போன்ற காலங்களில் வெள்ளை நிறத்தோடு சூரிய ஒளியும், பனியும் சேர்ந்து விடுவதால் பல்வேறு குழப்பங்கள் நிலவின.
இதற்கு தீர்வு காண பல்வேறு அறிஞர்களும், பொறியாளர்களும் ஆலோசனை மேற்கொண்டு, அதன் முடிவில், அலைநீளம் அதிகம் இருக்கும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று நிறங்களை பயன்படுத்தலாம் என தீர்மானித்தனர்.
எவ்வளவு தொலைவில் இருந்தும் பார்க்கும் போது இந்த மூன்று நிறங்கள் மட்டும் தெளிவாக தெரியும். பருவநிலை மாற்றங்களான மழை, வெயில், பனி, புகை மூட்டம் என எந்த சூழலிலும் இந்த மூன்று நிறங்கள் மட்டும் தெளிவாகத் தெரியும்.இதற்காகத்தான் இந்த நிறங்களை பயன்படுத்துகிறார்கள்.
உலகில் பல்வேறு நாடுகளில் அபாயத்தை குறிப்பதற்காக சிவப்பு நிறத்தை தான் பயன்படுத்துகிறார்கள். விபத்து ஏற்பட்டு நமது உடலில் இருந்து சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுவதால் சிவப்பு என்றாலே அபாயத்தை குறிக்கும் நிறமாக பார்க்கப்படுகிறது. வாகனத்தை நிறுத்துவதற்கு சிவப்பு பயன்படுத்த இதுவும் ஒரு காரணம்.
புறப்படுவதற்கு பச்சை நிறம் பயன்படுத்தப்படுகிறது. பச்சை என்றால் பசுமை G- GO செல் என அர்த்தம் இதனால்தான் பச்சை நிறம் செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.