ஏன் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்?

Reading Time: 2 minutes

இந்திய திரையுலகில் இத்தனை நடிகர்கள் இருந்தும் ஏன் ரஜினிகாந்த் இன்று வரை சூப்பர் ஸ்டாராக உள்ளார்?

இந்திய திரையுலகில் நிறைய நடிகர்கள் இருந்தும் இன்றளவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சூப்பர் ஸ்டார் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒரே பெயர் “ரஜினிகாந்த்”. நிறைய வளரும், வளர்ந்த நடிகர்களும் ஆசைப்படும் பட்டம் அது. ஆனால் அவ்வளவு எளிதாக ரஜினி காந்த் அந்த இடத்தை பிடித்துவிட்டாரா? அவர் ஏன் சூப்பர் ஸ்டார். அந்த பட்டத்தை பெற அப்படி அவர் என்ன செய்து விட்டார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் ஏன் சூப்பர் ஸ்டார் ?

  • ரஜினி காந்த் மட்டுமே இந்திய நடிகர்களில் பிளாக் & ஒயிட், ஈஸ்ட்மேன், கலர், 3டி, மோஷன் கேப்சர் போன்ற தொழில்நுட்பங்களில் நடித்தவர்.
  • சில வருடங்களில் காணாமல் போன நடிகர்கள் மத்தியில் 45 வருடங்களாக இன்றும் இளைஞர்களுடன் போட்டி போட்டு வருபவர்.
  • 6 இந்திய மொழிகளில் வெற்றி படத்தை கொடுத்தவர்.
  • ரஜினிகாந்த் இடைப்பட்ட காலத்தில் 2 வருடங்களில் 36 படங்கள் நடித்துள்ளார், அதிலும் 23 படங்களில் கதாநாயகனாக மெயின் ரோலில்.
  • முதல் 70MM படத்தின் கதாநாயகன்.
  • உலகளவில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்த முதல் இந்திய நடிகர்.
  • தென்னிந்திய நடிகர்களில் 300 கோடிக்கும் மேல் 3 படங்களில் வசூல் செய்தவர்.
  • ஹரிதாஸ்க்கு பிறகு இவரது படம் மட்டுமே இந்தியாவில் 700 நாட்களை கடந்து தியேட்டரில் ஓடியது.
  • ஒரே நாளில் தமிழ்நாட்டில் மட்டும் இவரது படம் 200 மில்லியன் வசூல் எடுத்து சாதனை செய்தது.
  • USA பாக்ஸ் ஆபிஸில் 4 படங்கள் 2.5 மில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்த முதல் தமிழ் நடிகர்
  • இந்திய அளவில் முதல் அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார்.
  • மூன்று வேடங்களில் பாலிவுட்டிலும் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தவர்.
  • ஹாலிவுட்டில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த்.
  • 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழ்நாட்டில் சில்வர் ஜூப்லி அடித்துள்ளன.
  • பத்ம பூஷன், பத்ம விபூஷன், தாதா சாஹிப் பால்கே என்ற உயரிய விருதுகளை வென்றவர்.
  • தனது போட்டியாளர் என்று கருதப்பட்ட கமல்ஹாசனுடன் வெளிப்படையான நட்புறவை பாராட்டுபவர்.
  • இன்றும் சினிமாவில் நடிக்க , வேலை செய்ய ஆசைப்படும் அனைவருக்கும் ரோல் மாடலாக இருப்பவர்.
  • புதியதாக சினிமாவிற்குள் வரும் இயக்குநர்கள், நடிகர்கள், மற்றும் டெக்னீசியன்ஸ் ஒர்க்கை கொஞ்சமும் ஈகோ இல்லாமல் நேரில் அல்லது போனில் அழைத்து பாராட்டுபவர்.

இதுபோன்று அவரது சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். யார் என்ன சொன்னாலும் என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் எங்கள் ரஜினிகாந்த் என்று ட்விட்டரில் அவரது ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: