2022-ம் ஆண்டு மிஸ்டர் ஒலிம்பியா பட்டத்தை ஈரானின் ஹாடி சூப்பனிடம் ( Hadi Choopan) இழந்தார் எகிப்திய பாடி பில்டிங் நட்சத்திரம் ‘பிக் ராமி’ (Big Ramy). ஏன் அவர் இந்த பட்டத்தை இழந்தார்? மீண்டும் ஜெயிப்பாரா? என்பது குறித்து நமது பிட்னஸ் கோச் Biglee முரளி அவர்களின் கருத்தை பார்க்கலாம்.
இந்த போட்டியில் பிக் ராமி பட்டத்தை தவற விட்டதன் காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம். இந்த போட்டிக்கு சிறிது நாட்களுக்கு முன் அவரது உடல் சரியான அமைப்பில் இருப்பதாக ஒரு பாட்கேஸ்ட்டில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பல நாட்களாகவே அவரது குவாட்ஸில் ‘Dent’ இருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்து அது என்ன என்று பலரும் கேட்டு வந்தனர். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட மெடிசின் ஒரு காரணம் என்று ஒரு சிலர் கூறினர். அது ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்றாலும் வேறு சில காரணங்களும் இருக்கலாம். உதாரணத்திற்கு Muscle பெல்லியில் கிழிந்திருந்தாலும் அங்கு ஒரு ‘Dent’ உருவாக வாய்ப்பு உள்ளது.

இதனால் அவர் ஸ்கோரிங் பாதிக்கப்பட்டிருக்கலாம், மேலும் ப்ரீ ஜட்ஜிங்கில் Hadi Choopan முன் Big Ramy கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கினார். அனைத்து முறையும் Hadi Choopan சென்டரில் நிற்க வைத்திருந்தார்கள் மற்றவர்கள் அவரை சுற்றியே நின்றனர்.
இந்த போட்டியில் பிக் ராமியின் உடலில் நிறைய சோர்வு தெரிந்தது. அதேபோல Lower, Mid back-ல் muscle குறைந்து போனது போல தெரிந்தது. இதனை Nurve damage என்று சொல்வார்கள். இந்த பாதிப்பு Irreversible என்று சயின்ஸ் சொல்கிறது. ஒருவேளை Nurve damage இருந்தால் அவர் பழைய நிலைக்கு வர முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

இந்த போட்டிக்கு பின்னர் அவரது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள பிக் ராமி “இதற்கு முன் 2 வது இடத்திலிருந்து 6 வது இடத்திற்கு சென்று மீண்டும் மிஸ்டர் ஒலிம்பியா டைட்டிலை பெற்றேன் அதேபோல என்னுடைய கடின முயற்சி மூலம் மீண்டும் அந்த இடத்தை தக்க வைப்பேன்” என்று கூறியுள்ளார். இது அவரது கடின உழைப்பை காட்டுகிறது. மீண்டும் அடுத்த வருடம் என்ன நடக்கிறது என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த மிஸ்டர் ஒலிம்பியா போட்டியில் இந்தியாவை முன்னிறுத்தி களமிறங்கிய புவன் சவுகன் களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.