உலகின் மிக அழகான பெண்மணி என்று அழைக்கப்பட்ட கினா லோலோபிரிகிடா வயது மூப்பு காரணமாக காலமானார்.

இத்தாலியன் நடிகை கினா லோலோபிரிகிடா வயது மூப்பு காரணமாக 95வது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமதி லோலோபிரிகிடா 1927 ஆம் ஆண்டில் ரோமுக்கு கிழக்கே உள்ள மலைப்பகுதியில் பிறந்தார். 1950 மற்றும் 60 களில், அவர் உலகின் மிகவும் விரும்பப்பட்ட நடிகையாக ஒருவராக இருந்தார், அன்றைய ஹாலிவுட்டின் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

1950கள் மற்றும் 60களில் ஐரோப்பிய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார் நடிகை கினா லோலோபிரிகிடா. இவர் பீட் தி டெவில், தி ஹன்ச்பேக் ஆஃப் நோட்ரே டேம் மற்றும் கிராஸ்டு வாள்ஸ் ஆகிய மெகா ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து கினா லோலோபிரிகிடா வை ரசிகர்கள் பலரும் ஒரு காலகட்டத்தில் ‘உலகின் மிக அழகான பெண்’ என்று அடிக்கடி அழைத்தனர்.
1970 களில், அவரது திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியபோது, லோலோபிரிகிடா பின்னர் ஒரு புகைப்பட பத்திரிகையாளராக தனக்கென ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் தோன்றினார்,1984ம் ஆண்டில் மிகவும் பிரபலமாக இருந்த அமெரிக்க பிரைம் டைம் சோப் ‘ஃபால்கன் க்ரெஸ்ட்’ இல் தொடர்ச்சியான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

யுனிசெப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பணியாற்றினார் கினா லோலோபிரிகிடா. அவர் அரசியலில் தீவிரமாக இருந்தார் – கடந்த ஆண்டு வரை. அவர் இத்தாலிய செனட் சபையில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.திருமதி கினா லோலோபிரிகிடா பேரனும் இத்தாலிய விவசாய அமைச்சரான பிரான்செஸ்கோ லோலோபிரிகிடா அவர் மறைவு குறித்து, “இத்தாலிய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர்” என்று ட்வீட் செய்துள்ளார்.