வாட்ஸ்அப் நியூ அப்டேட்ஸ் 2023

Reading Time: 2 minutes

இன்னைக்கு இருக்கற காலகட்டத்துல வாட்ஸ் அப் யூஸ் பண்ணாத ஆளே இல்லனு சொல்லலாம் அந்த அளவுக்கு வாட்ஸ் அடிப்படை தேவையில ஒன்னா மாறிடுச்சு. 2023ம் ஆண்டு வாட்ஸ் அப்பில் வரவுள்ள அப்டேட்டுகள் குறித்து பார்க்கலாம்.

Whatsapp New Updates 2023

Whatsapp New Updates 2023

Sharing Photos With Caption

முன்னாடிலாம் நாம் போட்டோ Forward பண்ணும் போது அந்த போட்டோ கூட இருந்த கேப்ஷன் Forward ஆகாது… வெறும் போட்டோ மட்டும்தான் போய் சேரும். ஆனா இப்போ கேப்ஷனோட போட்டோஸ் ஷேர் பண்ண முடியும்.வழக்கம் போல ஐபோன் யூசர்ஸ்க்கு மட்டும்தான் இந்த ஆப்ஷன கொடுத்தாங்க.. இப்போ ஆன்டாராய்டு போணுக்கும் கொடுத்துடாங்க.. Photos, videos, documents, GIFs என அனைத்தும் கேப்ஷனோடு ஷேர் செய்யலாம்.

அதே மாதிரி கேப்ஷன் வேணாம்னா.. அதை ரிமுவ் பண்ணிட்டு அணுப்பலாம்.
எடுத்துக்காட்டுக்கு, ஒருவருக்கு படம் அனுப்பி அதன் கீழ் காலை வணக்கம் அப்டீனு அனுப்பிகிறீர்கள். அதையே மற்றவருக்கும் அனுப்ப வேணும்னா படத்தோடு அந்த கேப்ஷனும் தற்போது வந்துள்ள அப்டேட் மூலம் ஷேர் செய்து கொள்ளலாம். அந்த கேப்ஷன் வேண்டாம் என்றாலும் நீக்கி கொள்ளாலாம்.

Companion Mode

ஒரே நேரத்தில் வாட்ஸ்அப்-பில் பல சாதனங்களில் இருந்து உள்நுழைய முடியாது. இதற்காக வாடப் நிறுவனம் புதிய ஆப்ஷனை கொடுக்க உள்ளது. கம்பானியன் மோட் ஒரே நேரத்தில் உங்களது லாகினை வெவ்வேறு டிவைஸ்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் டிவைஸ்களிலும் உங்களது கணக்கை பயன்படுத்தலாம்.

Picture-in-Picture for video calls

பயனர்கள் வாட்ஸ் அப் வீடியோ காலில் இருக்கும்போதே மற்ற பயன்பாடுகளை உங்கள் டிவைஸில் தொடரலாம், பிக்சர் இன் பிக்சர் வசதி உங்களை மற்ற செயலிகளுக்கு வீடியோ காலில் இருக்கும்போதே செல்லும் வசதியை கொடுக்கிறது. மேலும் உங்களது வீடியோ கால் சிறிய ஸ்கிரீனில் தொடர்ந்து இருக்கும்.

Screen lock for WhatsApp desktop

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப்பில் PIN அல்லது Password மூலம் பாதுகாத்து கொள்ள உதவும் ஒரு புதிய அம்சம் உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களின் டிவைஸ்களில் இந்த வசதி உள்ளது, விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனுக்கும் வரவுள்ளது

View Once text

பயனர்கள் ஒருமுறை மட்டும் ஓபன் செய்து பார்க்கும் வகையிலான மெசேஜ் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது.இதன் மூலம் பயனர்கள் பாதுகாப்பான, தனிப்பட்ட உரை விவாதங்களை நடத்தவும், முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

Voice notes on status

ஸ்டேட்டஸில் ஆடியோ பதிவையும் ஷேர் பண்ணும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்டேட்டஸ் ஆப்ஷன் வாட்ஸ்அப்பில் பீட்டா சோதனையின் கீழ் உள்ளது, மேலும் 2023 க்குள் அனைத்து பயனர்களுக்கும் இதை வழங்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

One thought on “வாட்ஸ்அப் நியூ அப்டேட்ஸ் 2023

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: