ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய ஆப்ஷன் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது ஐஓஎஸ் பயனர்கள் தேதி வாரியாக தங்களது மெசேஜை தேடலாம். இந்த அப்டேட் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த புதிய அப்டேட் மூலம் பயனர்கள் போட்டோக்கள், வீடியோ டிராக் செய்து வாட்ஸ் அப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும்.
வாட்ஸ்அப் மற்றும் வாய்ஸ்-ஓவர்-ஐபி இணைந்து ஆப்பிள் பயனர்களுக்கு ஆப் ஸ்டோரில் வாட்ஸ் அப் 23.1.75 அப்டேட்டட் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தேதி வாரியாக டெக்ஸ்ட் மற்றும் இமேஜ், வீடியோக்களை தேடவும் கண்டுபிடிக்கவும் முடியும் . மேலும், வாட்ஸ்அப் மூலம் பயனர் பகிர விரும்பும் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான பிற செயலியில் இருந்து டிராக் அண்ட் டிராப் செய்து மற்ற பயனர்களுக்கு அனுப்பலாம்.
இந்த வசதி ஒரு சில ஐபோன் பயனர்களுக்கு மட்டும் இப்போது கிடைத்துள்ளது. இன்னும் சற்று நாளில் அனைவருக்கும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலிம் இன்னும் சில நாட்களில் வாட்ஸ் அப்பில் பயனர்கள் ஒரிஜினல் தரத்தில் போட்டோக்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. இப்போது நீங்கள் வாட்ஸ் அப்பில் போட்டோகள் அனுப்பினால் அதன் தரம் குறைந்து சேர்வதை பார்த்திருப்பீர்கள். இதை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
WaBetaInfo என்ற நிறுவனம் வாட்ஸ் அப் குறித்த எக்ஸ்குலீசிவ் தகவல்களை வழங்கும். இது குறித்து, அந்நிறுவனம் ஆண்ட்ராய்ட் 2.23.2.11 பீட்டா வெர்ஷனில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது வரை இந்த வசதி டெஸ்டிங்கில் உள்ளது. கூடிய விரைவில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிகிறது.