மெடா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த கூடுதல் விவரங்களை பார்க்கலாம்.

வாட்ஸ் அப் செயலியில் கம்யூனிட்டி announcement குரூப்பில் புதிய அம்சங்களை இணைத்துள்ளது. ஐபோன் பயனர்கள் அந்த குரூப்பில் எமோஜி ரியாக்ட் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. மெசேஜுகளுக்கு வரும் ரியாக்ஷனை குருப்பில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் நோடிஃபிகேஷ்னையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் ஐபோன் பயனர்கள் Appstore-ல் இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
WABetaInfoவின் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் அதன் டிராயிங் டூலுக்கான புதுப்பிக்கப்பட்ட டெக்ஸ்ட் எடிட்டரை உருவாக்கி வருகிறது. இதில் text background, switch between fonts, text alignment ஆகிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளது.
Text background
இந்த அம்சம் மூலம் உங்கள் டெஸ்ட்க்கு பிண்ணனிகளை சேர்க்க முடியும். அனைத்து விதமான கலர்களிலும் சேர்க்கலாம். இதன் மூலம் உங்களது டெக்ஸ்ட் ஹைலைட் செய்யப்படும்.
Text Alignment
இந்த வசதி மூலம் டெக்ஸ்டை உங்களுக்கு ஏற்றார் போல் Align செய்து கொள்ளலாம். இதன் மூலம் இமேஜுக்கு ஏற்றார் போல டெக்ஸ்ட்டை பொருத்த முடியும்.
Switch between fonts
இந்த ஆப்ஷன் மூலம் உங்கள் இமேஜுக்கு ஏற்ற fonts-களை உங்களால் தேர்வு செய்து மாற்ற முடியும். உங்கள் கீபோர்டில் கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான fonts மாற்றி கொள்ளலாம்.
மேலும் வாட்ஸ் அப் செயலி நிறைய அப்டேட்டுகளை தொடர்ந்து டெஸ்ட் செய்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது