முக்கியமான விஐபிகளுக்கு பல கேட்டகரில பாதுகாப்பு கொடுப்பாங்க, இசட் பிளஸ், இசட், எக்ஸ், ஒய் இப்டி லிஸ்ட் இருக்கு. இதுல ரொம்ப முக்கியமானது இந்த Z கேட்டகரி. முக்கிய பிரமுகர்களுக்கு இந்த பிரிவுல பாதுகாப்பு கொடுக்கறாங்க அப்டீனா அதுல என்ன இருக்கு தெரிஞ்சுக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா..

Z பிளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு 36 வீரர்களும், Z பிரிவில் உள்ளவர்களுக்கு 22 வீரர்களும் பாதுகாப்புக்காக இருப்பாங்க.
டெல்லி போலீசார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் இந்த பாதுகாப்பு பணியில ஈடுபடுவாங்க.
இந்த வீரர்களுக்கு அதி நவீன ரக துப்பாக்கி கொடுத்துருப்பாங்க. அதி நவீன டெக் கருவிகள் இருக்கும். இதெல்லாம் விட இந்த வீரர்கள் ஒவ்வொருவரும் ஆயுதமே இல்லாம, மிரட்டல் தோனில எதிரிகளை சமாளிக்கிற அளவுக்கு ட்ரெய்ணிங் எடுத்துறுப்பாங்க…
Z பிளஸ் பிரிவுக்கும் Z பிரிவுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு. பிளாக் கேட்ஸ் அப்டீனு சொல்லக்கூடிய கருப்பு பூனைப்படைகள் ஒரு விஐபி வந்தால், இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ளார்னு தெரிஞ்சுக்க வேண்டியதுதான்.
Y பிரிவு பாதுகாப்பு அப்டீங்கிறது, நாள் ஒன்றுக்கு 11 பேர் கொண்ட வீரர்கள் 3 வேளை ஷி்ப்ட் பேசிஸ்ல இருப்பாங்க.
X பிரிவு பாதுகாப்பு பிரிவில் 2 வீரர்கள் மட்டுமே இருப்பாங்க. அமைச்சர், மற்றும் சில பிசினஸ் விஐபிகளுக்கு அதிகப்பட்சம், இந்த கேட்டகரிலதான், பாதுக்காப்பு கொடுப்பாங்க.