வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் ரீலீசானது. டிரைலர் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் பொங்கலுக்கு வெளியாக உள்ள “வாரிசு” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற “ரஞ்சிதமே”, “தீ தளபதி” பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்துள்ளார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்யாம், சதீஸ், வி.டி.வி.கணேஷ் உட்பட நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். டிரையிலரில் சுமன் உங்கள் இரண்டு மகனை பற்றி சொன்னீங்க, கடைசி மகனை பற்றி சொல்லவில்லை என்றதும் விஜய்யின் எண்ட்ரி. அம்மா ”எங்கடா இருக்க?” என்றதும் விஜய் “எல்லா இடமும் நம்ம இடம்” என்ற வசனம். மொத்தமாக டிரையிலரில் பார்க்கையில் வசனங்கள், சண்டை காட்சி, காமெடி என ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று தோன்றுகிறது.


இந்த பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஒரே நேரத்தில் வெளியாவதால் இரண்டு பேரின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தங்கள் ஹீரோவின் படத்தை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் வெளியான துணிவு படத்தின் டிரைலர் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நிலையில். வாரிசு படத்தின் டிரைலர் சாதனையை கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இரண்டு படங்களின் டிரைலரும் சும்மா மாஸாக தெறிக்கிறது. இருந்தாலும் படம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே இரண்டு படங்களில் எது வெற்றிப்படம் என்று தெரியும். பொறுத்திருந்து பார்க்கலாம். இதுவரை அஜித், விஜய் நடிப்பில் ஒரே நேரத்தில் வெளியான படங்கள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.