வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ரிவியூவை பார்க்கலாம்.
Varisu Movie Review

இந்த படத்தில் மேலும் ராஷ்மிகா, பிரபு, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம் உட்பட நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை என்ன என்று பார்க்கலாம்,
மிகப்பெரிய பிஸ்னஸ்மேனான சரத்குமாருக்கு 3 பிள்ளைகள், அதில் முதல் இரண்டு பிள்ளைகள் அப்பா சொல்வதை கேட்டு தொழிலில் உதவியாக இருக்க, மூன்றாவது பிள்ளையான கதாநாயகன் விஜய் தன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி வாழ்வேன், உங்கள் தொழிலை நான் பார்க்க மாட்டே, சொந்த காலில் நிற்பேன் என்று சொல்லி அப்பாவின் கோபத்தை சம்பாதித்து வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். 7 வருஷத்திற்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்லும் விஜய், அங்கு நடக்கும் சம்பவங்களே மீதிக்கதை.
இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமே விஜய் தான். தனது ரசிகர்களுக்காக அவர் மெனக்கெட்ட விதம் படம் முழுவதும் தெரிகிறது. சரத்குமார், ஜெய சுதா தங்களது கதாபாத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளனர். திலிப் சுப்பராயன், பீட்டர் ஹெயின் ஆக்ஷன் செமயாக தெறிக்கிறது. கார்த்திக்கின் ஒளிப்பதிவு பிரவின் கே.எல் எடிட்டிங் இந்த ஆக்ஷன் நகர்வுக்கும் மிகவும் உதவியுள்ளது. படத்தில் பாடல்கள், பிண்ணனி இசை மிகப்பெரிய பலம். இதைத்தவிர ப்ளஸாக சொல்ல படத்தில் வேற எதுவும் இல்லை என்பதே இந்த படத்தின் பிரச்னை.
டிரைலர் வந்ததும் அனைவரும் எதிர்பார்த்தது இந்த படம் அம்மா செண்டிமெண்ட் கொண்ட எமோஷனல் டிராமா என்று, ஆனால் அந்த அம்மா செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகவில்லை. இந்த படம் பெரிய கனெக்ட் கொடுக்கவில்லை அதற்கு காரணம் தெலுங்கு இயக்குநர் என்பதாலோ படம் தெலுங்கு படங்களில் வாடையே அதிகம் உள்ளது. மேலும் இந்த படம் சூர்ய வம்சம், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களின் பீலை கொடுக்கிறது.
மேலும், விஜய்க்கு சமமான வில்லன் கதாபாத்திரம் அமைக்கப்படாததால் படத்தில் ஒரு அழுத்தம் ஏற்படவில்லை. படத்தின் நீளமும் படம் எப்போது முடியும் என்று காத்திருப்பதை பார்க்க முடிகிறது.
மொத்தமாக படத்தை பார்க்கலாமா என்று கேட்டால், உங்களுக்கு விஜய் பிடிக்குமா? பேமிலி படங்களை ரசிப்பீர்கள் என்றால் நீங்கள் எஞ்சாய் பண்ண வாய்ப்பு உள்ளது.
இணைய தலைமுறை ரேட்டிங்: 2.75 /5