வாரிசு படத்தின் பாடல் வெளியீட்டு விழா டிசம்பர் 24 ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தோட ஆடியோ வெளியீட்டு செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் யார் யார் கலந்துக்க போறாங்க அப்படிங்கறது ரசிகர்கள் மத்தியில் ரொம்ப ஆர்வமா இருக்கு. கமல்ஹாசன், ஷாருக்கான், மகேஷ்பாபு, இவங்கள்லாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்கள், அப்படின்னு ஒரு தகவல் வெளியாகியிருக்கு.
இந்த விழாவில் முக்கியமா தளபதி 67 படத்தோட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொள்கிறார். விழாவுல தளபதி 67 படத்தை பற்றி அறிவிப்பார் அப்படின்னு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 2022ஆம் ஆண்டு முடிவடையும் தருணத்தில் தமிழ் சினிமாவோட முக்கிய நிகழ்வா வாரிசு படத்தோட ஆடியோ வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.
தமன் இசையில் இந்த படத்தில் அனிருத் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடலை அவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நேரலையில் பாட இருக்காரு. ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் சொல்ற குட்டி ஸ்டோரி ரொம்ப பெருசா பேசப்படும்.
கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, அதாவது ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் விஜய் பட ஆடியோ வெளியீட்டு விழா நடக்கபோது, அதைவிட அவர் என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போறாரு அப்படிங்கறதுதான் ரசிகர்களுக்கு ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு.
இந்த பொங்கலுக்கு அஜித்தின் “துணிவு” விஜய்யின் வாரிசு படத்துடன் போட்டி போட உள்ளது. இந்த நிலையில் இந்த ஆடியோ லாஞ்ச் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “நண்பர் அஜித்” குறித்து பேசி அஜித் ரசிகர்களின் வரவேற்பையும் பெறுவாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.