Upcoming Tamil Movies OTT Releases

Reading Time: 2 minutes

OTT தளங்களில் வரும் வாரம் வெளிவரக்கூடைய தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Gold (2022)

Source: Magic frames

Release Platform: Amazon Prime Video

Release Date: December 30, 2022

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நயன்தாரா, பிரித்திவிராஜ் நடித்து திரையரங்குளில் வெளியான திரைப்படம் “Gold”. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ரசிகர்களை இந்த படம் திருப்தி படுத்தவில்லை என்றே கூறலாம். மலையாளம், தமிழ் என்று இரு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 30ம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகிறது.


Gatta Kusthi

Source: Saregama

Release Platform: Netflix

Release Date: TBA

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்னு விஷால் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் “கட்டா குஸ்தி”. கணவன் – மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை நகைச்சுவை கலந்து மிக தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். நமக்கு பரிட்சயமான கதைக்களம் என்றாலும் ரசிக்கும் படியே இருந்தது. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி இருவரின் அருமையான நடிப்பினால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர்களுடன் கருணாஸ், முனீஸ்காந்த், காளி வெங்கட் போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

Kalaga Thalaivan

Source: Sony Music

Release Platform: Netflix

Release Date: 16 Dec2022

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “கலக தலைவன்”. உதயநிதியின் வித்தியாசமான நடிப்பில் தியேட்டரில் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் OTTயில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.


Ghosty – 2022

Source: Think Music India

Release Platform: Zee 5

Release Date: TBA

கல்யான் இயக்கத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள ஹாரர் காமெடி திரைப்படம் “Ghosty”. இதில் யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார்,ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் Zee5 OTT தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Naai Sekar Returns

Source: Sun TV

Release Platform: Netflix

Release Date: TBA

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து திரையரங்குகளில் டிச.9 ம் தேதி வெளியானது “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. வடிவேலு 10 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக நடிப்பதால் முழுவதும் காமெடி திரைப்படமாக இருக்கும் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த படத்தில் சிவாங்கி, பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

DSP

Source: sun tv

Release Platform: Netflix

Release Date: TBA

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்து வெளியான DSP இந்த மாதம் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அனு கீர்த்தி, புகழ், இளவரசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளில் பெரிய வரவேற்பு இல்லாத நிலையில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

Naan Mirugamai Mara

Release Platform: Sun NXT

Release Date: TBA

சத்யசிவா இயக்கத்தில் சசிக்குமார் நடித்து வெளியான திரைப்படம் “நான் மிருகமாய் மாற”. பழக்கப்பட்ட கதைக்களம், ரத்தம் தெரிக்கும் காட்சிகள் என ரிவியூவர்ஸ் மத்தியில் நெகட்டிவ் வாங்கிய இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் சன் நெக்ஸ்ட் OTT-யில் வெளியாக உள்ளது.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d