இனி எல்லா டிவைஸ்க்கும் Type-C சார்ஜர்தான்

Reading Time: 2 minutes

மின்னணுக் கழிவுகளை குறைக்கும் விதமாக ஐரோப்பிய அரசு, 2024 ம் ஆண்டு முதல் கைப்பேசி, செல்போன், கேமரா, டேப் என அனைத்து பொருட்களுக்கும் டைப் சி வகை சார்ஜர் மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ஏன் இந்த முடிவு?

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணுப் பொருள்களுக்கும் வித விதமான மாடல்களில் சார்ஜர்கள் உள்ளன, இதனால் ஒவ்வொரு மின்னணுப் பொருள்களுக்கும் ஒவ்வொரு சார்ஜர் பயன்படுத்தும் போது, மின்னணுக் கழிவுகள் அதிகமாகிறது.  இதனைத் தவிர்க்கும் விதமாக, அனைத்து வகையான எலக்ட்ராணிக் டிவைஸ்களுக்கும் டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பியா யூனியன் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2024 ம் ஆண்டு இறுதிக்குள் செல்போன்கள், டேப், கேமரா உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் பொதுவாக டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும் 2026ஆம் ஆண்டு முதல் லேப்டாப்களுக்கு இந்த வகை சார்ஜர் பயன்பாடு கொண்டுவரப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்த உறுப்பினர்களில் 602 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 13 உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர், மேலும் 8 பேர் வாக்களிக்காமல் தவிர்த்தனர். நாட்டில் உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளைக் குறைப்பதற்காகவும், நுகர்வோரின் தேர்வை மேம்படுத்தவதே இந்த நடவடிக்கையின் முக்கிய குறிக்கோளாகும்.

இதனால் என்ன பலன்?

இதனால் பலனும் உண்டு, மக்கள் தங்கள் சாதனங்களுக்கு வேறு வேறு சார்ஜர்கள் தேடி அலைய வேண்டாம். ஒரே சார்ஜர் மூலம் அனைத்து வகையான சாதனங்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். குறிப்பாக செல்போன்கள், ஏர்பேட், டேப், வீடியோ கேம், ஸ்பீக்கர்ஸ், கீபோர்ட் போன்ற 100 வாட்ஸ் சார்ஜிங் திறன் கொண்ட அனைத்து சாதனங்களுக்கும் இந்த சார்ஜரையே அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இதே போல நம் நாட்டிலும் அறிமுகம் செய்தால் நல்லது, நாமும் ஆப்பிள் சார்ஜர், சாம்சங் சார்ஜர் என தேடி அலையாமல் ஒரே வகையான சார்ஜரை பயன்படுத்தலாம். மேலும் மிண்ணனு கழிவுகளின் அளவும் குறைய வாய்ப்பு உள்ளது

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d