ஆண்ட்ராய்ட், ஐபோன் ட்விட்டர் ப்ளு மாத சந்தா விலை?

Reading Time: < 1 minute

ட்விட்டர் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் டிவைஸ்களுக்கான மாத சந்தா 11 அமெரிக்க டாலர் என்று அறிவித்துள்ளது.

Twitter blue monthly $11

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டர் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் டிவைஸ்களுக்கான ட்விட்டர் ப்ளூ சந்தாவின் விலையை அறிவித்துள்ளது. மாதம் 11 டாலர் எனவும், வருட சந்தா இதைவிட குறைவான விலையில் உள்ளது என்று அறிவித்துள்ளது.

அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிற பொது நபர்களின் கணக்குகளில் மட்டும் நீல நிற வெரிபிகேஷன் டிக் இருந்து வந்தது. எலான் மஸ்க் பொறுப்பை ஏற்ற பிறகு, நீல நிற டிக் இப்போது பணம் செலுத்தத் தயாராக உள்ள அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரை போல கூகுளின் ப்ளே ஸ்டோரில் இந்த கட்டணம் வசூலிக்கபடும் என்று தெரிகிறது. ட்விட்டர் ப்ளு வருடாந்திர சப்ஸ்கிரிப்ஷன் 84 டாலர் ஆகும். மாத சந்தாவை விட 8 டாலர் டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இணைய பயனர்களுக்கான தள்ளுபடி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டரின் ப்ளூ டிக் பாதி விளம்பரங்களைக் கொண்டிருக்கும் என்றும், ட்விட்டர் ப்ளு விளம்பரங்கள் இல்லாத ப்ரீமியம் சேவையை வழங்கும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார். எலான் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். பின்பு நிறைய பணி நீக்கம் உட்பட பல மாறுதல்களை செய்தார். அதில் இந்த ட்விட்டர் ப்ளு சேவையும் ஒன்று.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d