2022ம் ஆண்டில் யூட்யூபில் மிகவும் வைரலான டாப் 10 தமிழ் டான்ஸ் ஹிட்ஸ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. #ArabicKuthu – Beast
அனிருத் இசையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் ரிலீசாகி செம வைரல். உலகம் முழுவதும் இந்த பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. யூடியூபில் லிரிக் மற்றும் வீடியோ பாடல் மொத்தமாக 853 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
2. O Soldriya mama – Pushpa
அல்லு அர்ஜூன் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ‘புஷ்பா’ படத்தின் ”ஓ சொல்றியா மாமா” பாடல் 211 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடல் இவ்வளவு டிரெண்ட் ஆக நடிகை சமந்தாவின் நடனம் மற்றும் பாடல் வரிகள் முக்கிய காரணம்.
3. #PathalaPathala – Vikram
இந்த வருடமும் அனிருத்துக்கு தொடர்ந்து ஹிட் தான். விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடல் யூட்யூபில் மொத்தமாக 149 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
4. #Jalabulajangu – Don
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ திரைப்படத்தின் “ஜலபுலஜங்” பாடல் யூட்யூப் தளத்தில் மொத்தமாக 149 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அனிருத் இசை வழக்கம் போல் தெறிக்கவிட்டுருப்பார். இளைஞர்கள் மத்தியில் இந்த பாடல் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
5. #TwoTwoTwo – KVRK
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் வெளியான “Two Two Two” பாடல் 149 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்தது. அனிருத் இந்த வருடத்தில் கொடுத்த மிகச்சிறந்த ஆல்பத்தில் இந்த படமும் குறிப்பிடதக்கது.
6. #Ranjithame – Varisu
2023ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ள வாரிசு படத்தின் “ரஞ்சிதமே” பாடல் 109 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த பாடல் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்த பாடலை தமன் இசையமைத்துள்ளார்.
7. #ThaaiKelavi – Thiruchitrambalam
அடுத்த டான்ஸ் ஹிட் சாங் திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து “தாய்கிழவி”. மீண்டும் அனிருத் இசையில் வெளியான குத்து நம்பர். தனுஷ் டான்ஸ் ஸ்டெப்ஸ் பலரால் ரசிக்கப்பட்டது. இந்த பாடல் மொத்தமாக 109 மில்லியன் பார்வையாளர்களை யூட்யூப் தளத்தில் பெற்றுள்ளது.
8. #KanjaPoovuKannala – Viruman
யுவன் சங்கர் ராஜா இசையில் விருமன் படத்தில் இடம் பிடித்த “கஞ்சா பூவு கண்ணால” பாடல் 98 மில்லியன் பார்வையாளர்களை யூட்யூபில் கடந்துள்ளது.
9. #Mallipoo – VTK
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான “மல்லிப்பூ” பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. ஸ்லோவாக ஆரம்பித்தாலும் நடுவில் நடிகர் சிம்பு போடும் எதார்த்தமான டான்ஸ் அனைவராலும் ரசிக்கப்பட்டது. யூட்யூபில் 95 மில்லியன் பார்வையாளர்களை இதுவரை பெற்றுள்ளது.
10. #NangaVeraMari – Valimai
யுவன் சங்கர் ராஜா இசையில் நடிகர் அஜித் நடித்து வெளியான வலிமை படத்தின் “நாங்க வேற மாறி” 78 மில்லியன் பார்வையாளர்களை இதுவரை கடந்துள்ளது.
இந்த பட்டியலில் மிஸ் ஆன மேலும் உங்களுக்கு பிடித்த பாடல்களை கமெண்டில் தெரிவியுங்கள்.