பருமனாக இருக்கும் நிறைய பேர் அதிகம் கேட்கும் கேள்வி இதுதான், வெயிட் குறைய எந்த மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நான் உங்கள் பிட்னஸ் கோச் Biglee முரளி , இந்த பதிவில் உடல் எடையை குறைக்க நாம் சாப்பிட வேண்டிய டாப் 5 உணவுகள் குறித்து பார்க்கலாம்.
நிறைய பேர் Fat Loss பயணத்தை தொடர முடியாமல் போவதற்கு காரணம் ருசியில்லாத சாப்பாடுகளை Fat Loss செய்வதற்காக முதலில் சாப்பிட்டு விட்டு பின்னர் அதிக பசி காரணமாக டயட் முடிவை கைவிடுகின்றனர். உங்களது பயணத்தை மேலும் சரியாக வழிநடத்த Top 5 fat burning foods பற்றி கீழே காணலாம்.
1. வெள்ளரிக்காய் (Cucumber)
வெள்ளரிக்காயில் 97 சதவீதம் நீர்சத்து உள்ளது. 100 கிராம் வெள்ளரியில் வெறும் 15 கலோரிகள் தான். எனவே நீங்கள் நிறையவும் சாப்பிடலாம். நான் Fat Loss செய்யும் போது 1/2 கிலோ வெள்ளரிக்காய் உணவில் எடுத்து கொண்டேன். நம் வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதுடன் குறைந்த அளவில் கலோரிகளை எடுத்து கொள்கிறோம்.

2. சுக்கினி (Zucchini)
சுக்கினி இன்று அதிக பரவலாக பிரபலம் அடைந்து வரும் ஒரு காய்கறி. இதுவும் வெள்ளரியை போலவே, 100 கிராமில் வெறும் 17 கலோரிகள் மட்டுமே உள்ளது. சுக்கினியை நன்றாக துறுவிவிட்டு பாஸ்தா, நூடுல்ஸ் போல சமைத்து சாப்பிடலாம். இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

3. தர்ப்பூசணி (Watermelon)
தர்ப்பூசணி பழத்தை நீங்கள் வெயிட் லாஸ் செய்ய சாப்பிடலாம். இதில் 92 சதவீதம் நீர் சத்து உள்ளது. 100 கிராம் பழத்தில் வெறும் 30 கலோரிகள் மட்டுமே உள்ளது. ருசியும் நன்றாக இருக்கும். ஒரு ஆராய்ச்சியில் தர்ப்பூசணி சாப்பிட்டவர்களில் அதிகம் பேர் Fat loss செய்துள்ளனர் என்றும் மேலும் தர்ப்பூசணி சாப்பிடுவதால் Craving உணர்வு ஏற்படாது என்றும் மருத்துவ ஆய்வில் குறிப்பிடுகிறார்கள். அதனால் இனிப்பான இந்த தர்ப்பூசணியை நீங்கள் சாப்பிடுவதால் ஈசியாக Fat loss செய்யலாம்.

4. லெட்டூஸ் (Lettuce)
அடுத்ததாக நாம் பார்க்க போவது ஒரு ஆங்கில உணவு லெட்டூஸ். இது கீரை வகையை சார்ந்தது. 92 சதவீதம் நீரால் ஆனது. 100 கிராம் சாப்பிடும் போது 15க்கும் அதிகமான கலொரிகளை உட்கொள்கிறோம். இதனை நம் காய்கறி சாலட் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இதுவரை பார்த்த 4 உணவுகளிலும் உள்ள ஒற்றுமை அனைத்திலும் அதிகளவு நீர் உள்ளது. மிகவும் குறைந்த கலோரிகளே உள்ளது.

5. Sugar-Free chewing gum
5- வதாக Fiber இல்லாத ஒரு ஸ்பெஷல் புட் Sugar-Free chewing gum. இதில் என்ன ஸ்பெஷல் என்னவென்று கேட்டால், காலை மற்றும் மதிய உணவிற்கு நடுவில் chewing gum 20 நிமிடம் chew செய்கிறார்களோ அவர்கள் கிட்டதட்ட 70 கலோரிகள் குறைவாக சாப்பிட்டதாக ஆய்வுகள் கூறுகிறது. இதன் மூலம் பசியின் அளவும் குறையும்.

Sugar Free Chewing gum