த்ரில்லர் மூவிஸ் ரசிகரா நீங்கள்? இந்த வார இறுதியில் நீங்கள் பார்த்து ரசிக்க அமேசான் பிரைம் OTT-ல் உள்ள டாப் 10 த்ரில்லர் மூவிஸ் பட்டியலை பார்க்கலாம்.
10. நானே வருவேன் (Naane Varuven – 2022)

IMDB Rating: 6.3/10
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், இந்துஜா, யோகி பாபு மற்றும் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒரு கேரக்டர் நல்லவராகவும் மற்றொரு கேரக்டர் நெகடிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் இரண்டாம் பாதி சற்று மெதுவாகவே நகரும். முதல் பாதியில் ஹாரர் படத்திற்கான பில்டப் இருக்கும், படத்தின் இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சி அனைவரும் ரசிக்கும் விதமாக இருக்கும். தனுஷின் நடிப்பு மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் மற்றும் பிண்ணனி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
9. FIR (2017)

IMDB Rating: 7/10
இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்னு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா நடித்துள்ள திரைப்படம் “FIR”. ஒரு அப்பாவி முஸ்லீம் இளைஞன் தன் பெயரினால் இந்த சமூகத்தில் எப்படி திவிரவாதியாக பார்க்கப்படுகிறான் என்பதே இதன் கரு. விஷ்ணு விஷால் , கெளதம் வாசுதேவன் நடிப்பு இந்த கதைக்கு வலு சேர்த்துள்ளது. முதல் பாதியில் சரியாக கதையை கையாண்ட இயக்குநர் இரண்டாம் பாதியில் கோட்டைவிட்டுள்ளார். இருந்தாலும் பார்த்து ரசிக்ககூடிய ஒரு நல்ல த்ரில்லர் திரைப்படம்.
8. வெள்ளை பூக்கள் (Vellai Pookal- 2019 )

IMDB Rating: 7.1/10
விவேக், சார்லி மற்றும் பலர் நடித்துள்ள ஹாலிவுட் ஸ்டைல் தமிழ் த்ரில்லர் மூவி “வெள்ளை பூக்கள்”. மர்ம கொலைகளைசெய்யும் குற்றவாளியை கண்டுபிடிக்க ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரி செய்யும் துப்பறியும் வேலைகள்தான் இந்த ப்டம். ஓய்வு பெற்ற அதிகாரியாக விவேக் நடித்துள்ளரார். அவர் கடைசியி இந்த கொலைகளை யார் செய்தது என கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் கதை. சுவாரசியமான காட்சிகள் மற்றும் வெளிநாட்டு லொக்கேஷனால் ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வை கொடுக்கும்.
7. அதே கண்கள் (Adhe Kangal – 2017)

IMDB Rating: 7.2/10
பார்வையற்ற இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றி பணம் பறிக்கும் பெண், அந்த பெண்ணை பற்றி தெரியாமல் காதலிக்கும் கதாநாயகன். பார்வை வந்ததும் அவளை தேடி அலையும் காதலன் கடைசியில் உணமைய தெரிந்ததும் என்ன செய்கிறான் என்பதே கதை. கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா நாயர், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டிவிஸ்ட் மற்றும் பிண்ணனி காட்சியின் இசை இந்த படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்.
6. ஜீவி (Jiivi- 2019)

IMDB Rating: 7.8/10
தமிழ் சினிமாவில் இதுவரை வந்த திரைப்படங்களில் புத்திசாலிதனமான திரைப்படம் “ ஜீவி ”. தொடர்பியல் தான் இந்த படத்தின் முக்கிய கரு. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்பதை மிகவும் தெளிவாக ரசிகர்களுக்கு புரியும் படி த்ரில்லர் காட்சிகளுடம் காட்டியிருப்பார்கள். படத்தின் ஹைலைட் திரைக்கதைதான் அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கும் படி சிறப்பாக எழுதியிருப்பார்கள். இணைய தலைமுறையின் Must watch suggestion.
5. மகாமுனி (Mahamuni – 2019)

IMDB Rating: 7.7/10
”ஒருவர் செய்யும் நல்ல விஷயங்கள் மற்றும் கெட்ட விஷயங்களும் அவர்களின் சந்ததியையே வந்து சேரும். மனிதன் அவர்களின் சந்ததிகளுக்கு விட்டுச்செல்வது எது?” என்பதே இந்த படத்தின் கரு. ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், அவருடன் இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். மெளன குரு படத்தை இயக்கிய சந்த குமார் இந்த படத்தின் இயக்குநர். ஆர்பாட்டம் இல்லாமல் எதார்த்தமாக திரைக்கதையுடன் நகரும் த்ரில்லர். கொஞ்சம் ஸ்லோவாக படம் நகர்ந்தாலும் கதைக்களம் ரசிக்கும்படி வித்தியாசமாகதான் இருக்கும்.
4. துப்பறிவாளன் (Thupparivalan – 2017)

இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் விஷால்,பிரசன்னா, பாக்யராஜ், சிம்ரன் நடித்துள்ள திரைப்படம் “துப்பறிவாளன்”. sherlock holmes பாணியில் எடுக்கப்பட்ட தமிழ் படம். ஒரு சிறுவனின் வளர்ப்பு நாய் , மர்மமாக இறந்து போக ., அது பற்றி துப்பறிய களம் இறங்கும் ஒரு தனியார் துப்பறிவாளன் ., போலீஸ் உதவியுடன் பல கோடி பணத்திற்காக கொலை செய்யும் கும்பலை தேடிப் பிடித்து எப்படி அழிக்கிறார் என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுத்துள்ளார் மிஸ்கின். படம் ஸ்லோவாக ஸ்டார்ட் ஆனாலும் இரண்டாம் பாதிக்கு பிறகு கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கும்.
IMDB Rating: 7.5/10
3. இமைக்கா நொடிகள் (Imaikaa Nodigal – 2018)

IMDB Rating: 7.3/10
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோர் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் மூவி “இமைக்கா நொடிகள்”. பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். சிபிஐ அதிகாரி நயன்தாரா நடித்துள்ளார். பல கொலைகளை செய்து வரும் சைக்கோ கில்லராக அனுராக் கஷ்யப். அவர் செய்த கொலைக்காக போலிசிடம் மாட்டி கொள்ளும் அதர்வா (நயன்தாரா தம்பியாக நடித்துள்ளார்). அந்த சைக்கோ கில்லரை பிடித்தாரா? தன் தம்பியை காப்பாற்றினாரா நயந்தாரா என்பதே கதை. 3 மணிநேரம் மூவி ரன் டைம் இருந்தாலும் கிரிப்பிங்கான ஸ்கிரின் ப்ளே மூலம் தரமான மூவியை கொடுத்துள்ளார் இயக்குநர்.
2. தீரன் அதிகாரம் ஒன்று (Theeran Adhigaram ondru – 2017)

IMDB Rating: 8.2/10
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “தீரன் அதிகாரம் ஒன்று”. இரவு நேரங்களில் நெடுஞ்சாலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளில் புகுந்து ஒரு கும்பல் பணம் மற்றும் நகைகளை திருடுகிறது. அதை எப்படி கார்த்தி தனது குழுவுடன் கண்டறிந்தார் என்பதே கதை. பதை பதைக்க வைக்கும் காட்சிகளுடன் மிகவும் ரசிக்க வைக்கும் த்ரில்லராக எடுத்துள்ளார் இயக்குநர். இணைய தலைமுறையின் Must watch suggestion.
1 .துருவங்கள் பதினாறு (Dhuruvangal pathinaru – 2017)

IMDB Rating: 8.2/10
நமது லிஸ்ட்டில் முதல் இடத்தில் இயக்குநர் நரேன் கார்த்திகேயன் இயக்கத்தில் ரஹ்மான் மற்றும் புது முகங்கள் நடித்து மிகப்பெரிய ஹிட்டான சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் “துருவங்கள் பதினாறு”. ஒரு விபத்து, ஒரு மிஸ்ஸிங்கேஸ் மற்றும் தற்கொலை அது குறித்த விசாரனை அதில் அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள் இதுவே படத்தின் கரு. யூகிக்க முடியாத கிளைமேக்ஸ் , கிரிப்பிங்கான ஸ்கிரின் ப்ளே படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது. இதுவரை பார்க்காதவர்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய திரைப்படம். இணைய தலைமுறையின் Must watch suggestion.