உலகளவில் 2022ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் கலெக்ஷனில் டாப் 10 அடித்த திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

10. காத்து வாக்குல ரெண்டு காதல் ( #KVKR )
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்து ஏப்ரல் 28ம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியான இந்த திரைப்படம் இந்த வருட பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் 10வது இடத்தை பிடித்துள்ளது.
9. விருமன் (#Viruman )
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்து வெளியான திரைப்படம் “விருமன்”. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. மக்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றிருந்தாலும் இந்த வருடத்தின் டாப் கலெக்ஷன் பட்டியலில் இடம்பிடித்து விட்டது.
8. லவ் டுடே (#LoveToday)
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான “லவ் டுடே” . இளைஞர்களால் கொண்டாடப்பட்டது. கலெக்ஷனில் சாதனை படைத்த இந்த படம் தெலுங்கிலும் ரிலீசாகி சக்க போடு போட்டது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
7. சர்தார் (#Sardar)
இந்த வருட தீபாவளி பண்டிகையில் வெளியான படங்களில் வின்னர் “சர்தார்”. இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமுதாயத்திற்கு தேவையான மெசேஜை கார்த்தி போன்ற அற்புதமான நடிகரை வைத்து மிகவும் தெளிவாக சொல்லியிருப்பார்கள்.
6. திருச்சிற்றம்பலம் (#Thiruchitrambalam)
மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பாரதிராஜா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் என பல முண்ணனி நடிகர்கள் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. குடும்பம் குடும்பமாக கண்டு ரசித்த அருமையான படம். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். இந்த வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் 6 வது இடத்தை பிடித்துள்ளது.
5. டான் (#Don)
சிவகார்த்தி கேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் “டான்
. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்பா- மகன் இடையே நடக்கும் கதைக்களத்தில் சமுத்திரக்கனி அப்பாவாக நடித்திருந்தார். அந்த செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆன காரணத்தால் படமும் வெற்றி பெற்றது.
4. வலிமை (#Valimai)
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளியான “வலிமை” திரைப்படம் பெரிதாக ரசிகர்களை கவர தவறியது என்றாலும் பாக்ஸ் ஆபிசில் வேட்டையாடியதை மறுக்க முடியாது. ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்து இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
3. பீஸ்ட் (#Beast)
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ரசிக்கப்படாமல் போனாலும், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ரூ. 250 கோடி வசூல் செய்து இந்த வருடத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
2. விக்ரம் (#Vikram)
நாயகன் மீண்டு வந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியான “விக்ரம்” மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர். சூர்யா கேமியோ ரோல் செய்திருப்பார். ரூ.432 கோடிக்கும் அதிகமாக கலெக்ட் செய்து இந்த படம் பாக்ஸ் ஆபிசில் 2வது இடத்தில் உள்ளது.
1. பொன்னியின் செல்வன் (#PonniyinSelvan1)
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” உலகம் முழுவதும் ரூ. 550 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூலை எடுத்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பெரிய திரைப்பட்டாளமே நடித்திருந்த இந்த படத்தின் 2ம் பாகம் அடுத்த வருடம் வெளியாக உள்ளது.
இந்த டாப் 10 கலெக்ஷன் பட்டியலில் உள்ள திரைப்படங்களில் அனிருத் ரவிச்சந்தர் 5 படங்களுக்கு இசையமைத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா 3 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதே போல் இந்த பட்டியலில் நடிகர் கார்த்தியின் 3 திரைப்படங்கள் உள்ளன.