Hotstar -ல் உள்ள டாப் 10 தமிழ் டப்பிங் மூவிஸ்

Reading Time: 3 minutes

Hotstar OTT-யில் தமிழ் டப்பிங்கில் உள்ள டாப் 10 டிஷ்னி மூவிஸ் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்.

Top 10 Tamil Dubbed Disney Movies on Hotstar

10. தி லோன் ரேஞ்சர் (The Lone Ranger)

IMDB Rating: 6.4/10

நடிகர் ஜானி டெப் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் “தி லோன் ரேஞ்சர்”. வெஸ்டர்ன் கிளாசிக் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் அட்வன்ஜராக இருக்கும். ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் தமிழ் டப்பிங்குடன் இந்த படம் உள்ளது.

9. தி பிஎஃப்ஜி (The BFG)

IMDB Rating: 6.4/10

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய டிஸ்னியின் “தி பி.எஃப்.ஜி” . நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. ஒரு இளம் பெண் மற்றும் ஜெயண்ட்டின், இருவரும் சந்திக்கும் போது நடக்கும் சம்பவங்கள் தான் கதை. கிராபிக்ஸ் சிறப்பாக இருக்கும் ஒரு நல்ல பீல் குட் மூவி.

8. ஆலிஸ் இன் ஒண்டர்லாண்ட் (Alice in wonderland)

IMDB Rating: 6.4/10

ஆங்கில எழுத்தாளர் லூயிஸ் கரோல் எழுதிய ஆலிஸின் அட்வென்ச்சர்ஸ் இன் வொண்டர்லேண்ட் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “Alice in wonderland”. ஆலிஸ் என்ற இளம் பெண் பற்றிய கதை, நல்ல Fantasy திரைப்படம். தமிழ் டப்பிங்கிலும் ஹாட்ஸ்டாரில் உள்ளது.

7. ஜான் கார்ட்டர் (John Carter)

IMDB Rating: 6.6/10

2012ம் ஆண்டு வெளியான சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் திரைப்படம். கதையின் ஹீரோ அவருக்கே தெரியாமல் பூமியில் இருந்து மார்ஸ் கிரகத்திற்கு டெலிபோர்டாகி சென்று விடுகிறார். அங்கு நடக்கும் விநோதங்களே மொத்த படம்.

6. பிரின்ஸ் ஆஃப் பெர்சியா (Prince Of Persia)

IMDB Rating: 6.6/10

2010ம் ஆண்டு வெளியான Fantasy திரைப்படம் “Prince Of Persia” இது வீடியோ கேம் சீரியஸை அடிப்படையாக கொண்ட திரைப்படம். கிராபிக்ஸ் காட்சிகள், திரைக்கதை சூப்பராக இருக்கும். மிஸ் பண்ணாமல் பாருங்க, ஹாட்ஸ்டாரில் தமிழ் டப்பிங்கில் இருக்கு.

5. ட்ரான் லெகஸி (Tron: Legacy)

IMDB Rating: 6.8/10

2010ல் வெளியான சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்சன் திரைப்படம் Tron: Legacy. வெர்ச்சுவல் ரியாலிட்டி உலகத்தில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே கதை. விஷுவல், கிராபிக்‌ஷ் நேர்த்தியாக இருக்கும்.

4. லயன் கிங் (Lion King)

IMDB Rating: 6.9/10

2019ம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படம் “லயன் கிங்”. உங்கள் குழந்தைகளுடன் வார இறுதியில் பார்க்க சரியான திரைப்படம்.

3. அலாதின் (Aladdin)

IMDB Rating: 7/10

இந்த படத்தின் கதை நமக்கு தெரிந்ததே. விளக்கை தேய்த்தவுடன் வெளியில் பூதம் வந்து நாம் கேட்கும் அரங்களை கொடுக்கும். ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பூதமாக நடித்துள்ளார். இந்த படம் மிகவும் சூப்பராக, நல்ல அட்வெஞ்சராக இருக்கும்.

2. நார்னியா (The Chronicles of Narnia)

IMDB Rating: 7/10

90ஸ் கிட்ஸ் முதல் 2000 கிட் வரை அனைவரும் ரசித்து பார்த்த ஒரு அட்வெஞ்சர் மூவி “நார்னியா”. 2005 முதல் 2010 வரை மொத்தம் 3 பாகங்கள். அனைத்துமே வேற லெவலில் இருக்கும் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய திரைப்படம்.

1. பைரேட்ஸ் ஆஃப் கரிபியன் (Pirates of Caribbean)

IMDB Rating: 8/10

நம்ம லிஸ்ட்டில் முதல் இடத்தில் Pirates of Caribbean. இது ஒரு ஆக்‌ஷன், அட்வெஞ்சர், த்ரில்லர் திரைப்படம். இந்த படம் 2003 – 2017 வரை 5 பாகங்களாக வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கேப்டன் ஜாக்ஸ் ஸ்பேர்ரோ ரோலை ஜானி டெப் செய்திருப்பார். 5 பாகங்கள் ஒவ்வொன்றும் 2.30 மணி நேரத்திற்கு மேல் இருக்கும். ஆனால் செம விறுவிறுப்பாக செல்லும் என்பதால் நமக்கு போர் அடிக்காது. மிஸ் பண்ணாம பாருங்கள்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: