Top 10 Most Disturbing Horror movies on Netflix

Reading Time: 4 minutes

நெட்ப்ளிக்ஸ் தளத்தில் உள்ள ஹாரர் மூவிக்களில், IMDB ரேட்டிங் மற்றும் பார்வையாளர்களின் ரிவியூ அடிப்படையில் டாப் 10 வரிசையை பட்டியலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் உள்ள அனைத்து படங்களும் ஆங்கில மொழி ஆடியோ மற்றும் சப்டைட்டிலுடன் உள்ளது. அனைத்து படங்களும் ”A” Certified பெற்றது.

10. The Ritual – 2017

Image source: eoneuk

IMDB Rating: 6.3/10

2017ம் ஆண்டில் வெளியான பிரிட்டிஷ் ஹாரர் திரைப்படம் The Ritual. நான்கு நண்பர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு டிரக்கிங் செல்கின்றனர். அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், காட்டில் உள்ள மர்மங்கள் மற்றும் அங்கு நடக்கும் திகில் சம்பவங்கள்., கடைசியில் என்ன நடந்தது? உயிர் பிழைத்தார்களா? என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் Adam Nevill எழுதிய “The Ritual” நாவலின் தழுவலாகும்.

9. Gerald’s Game – 2017

Image Source: Netflix

IMDB Rating: 6.5/10

அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங் எழுதிய சஸ்பென்ஸ் நாவலை படமாக இயக்கி உள்ளார் Mike Flanagan. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு கெஸ்ட் ஹவுஸ், அங்கு படுக்கை அறையில் மனைவியின் கையில் விலங்கிட்டு ரொமான்ஸ் செய்யும் கணவர் மாரடைப்பு வந்து இறந்து விடுகிறார். மனைவி கை விலங்கை அவிழ்க்கமுடியாமல் அங்கேயே மாட்டிக்கொள்கிறார். அந்த நேரத்தில் அவள் மனதில் தோன்றும் எண்ணங்கள்., அங்கிருந்து எப்படி தப்பித்தார்? என்பதே இந்த படத்தின் மீதி கதை. கதாநாயகியான Carla Gugino வின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.

8. His House – 2020

Image Source: Netflix

IMDB Rating: 6.5/10

2020ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க ஹாரர் த்ரில்லர் திரைப்படம் His House. சூடானைச் சேர்ந்த ஒரு அகதி தம்பதியினர், அமெரிக்காவில் தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்க நினைக்கின்றனர். அவர்களுக்கு அரசு கொடுக்கும் இல்லத்தில் நடக்கும் ஹாரர் சம்பவங்கள். அவர்கள் எப்படி அதை சமாளித்தார்கள் என்பதே இந்த படத்தின் மொத்த கதை. சில காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கும் விதம் இருந்தாலும் படம் முடியும் போது ஒரு டீசண்டான கதையம்சம் கொண்ட ஹாரர் மூவி பார்த்த திருப்தியை கொடுக்கும்.

7. Hush – 2016

Image Source: Netflix

IMDB Rating: 6.6/10

காது கேட்காத, வாய் பேச முடியாத கதாநாயகி, தான் எழுதி வரும் நாவலை முடிக்க நகருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் உள்ள இல்லத்திற்கு செல்கிறார். அங்கு நள்ளிரவு மாஸ்க் அணிந்து நாயகியை கொல்ல கொலையாளி ஒருவன் வருகிறான். அவனிடம் இருந்து எப்படி தப்பித்தாள் என்பதை திகிலூட்டும் காட்சிகள் மூலம் தரமான படமாக எடுத்திருப்பார் Mike Flanagan.

6. Fear Street: Part 2 – 2021

Image Source: Netflix

IMDB Rating: 6.7/10

லீ ஜானிக் இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான அமெரிக்க சூப்பர் நேச்சுரல் ஸ்லாசர் திரைப்படம் Fear Street Part 2: 1978. Camp Nightwing-ல் இரவில் நடக்கும் கொடூர கொலைகள், அடுத்த நாள் காலை விடிவதற்குள் என்ன நடந்தது? கதாநாயகி தப்பித்தாரா என்பதே கதை. மொத்தம் மூன்று பாகமாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் உள்ளது, இந்த இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

5. Insidious – 2010

Image Source: Netflix

IMDB Rating: 6.8/10

இந்த பட்டியலில் 5வது இடத்தில் ஜேம்ஸ் வான் இயக்கியுள்ள சூப்பர் நேச்சுரல் ஹாரர் மூவி Insidious. இதுதான் முதல் பாகம். கோமா நிலையில் உள்ள தன் மகனை சுற்றி பல்வேறு அமானுஷ்யங்கள் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் நாயகன். தன் மகனை காப்பாற்றினாரா? என்ன நடந்தது எந்தே கதை. திகிலூட்டும் காட்சிகள் மற்றும் சுவாரசியமான ஸ்கிரின்ப்ளே மூலம் சீட்டின் நுணியில் உட்கார வைத்திருப்பார்கள். இணைய தலைமுறையின் Must watch suggestion.

4. The Platform – 2019

Image Source: Netflix

IMDB Rating: 7/10

Galder Gaztelu-Urrutia இயக்கியுள்ள ஸ்பானிஸ் மூவி த்ரில்லர் திரைப்படம் The Platform. நிறைய அடுக்குகளை கொண்ட ஒரு சிறை, ஒரு அறையில் இருவர். ஒருவர் சாப்பிடும் அளவு சாப்பாடு, அதையும் சாப்பிட 2 நிமிடம் கால அவகாசம். இதில் மாட்டி தவிக்கும் நபர்கள் என்ன செய்தார்கள்? யார் உயிர் பிழைத்தது என்பதே மொத்த படத்தின் கதை. இந்த படம் பார்க்கும் போது இந்த மாதிரிலாம் கதையை இவர்கள் எப்படி யோசித்தார்கள்? இப்படி கொடூரமாக எடுத்துள்ளார்கள் என்றெல்லாம் நமக்கு தோனாமல் இல்லை.

3. Raw

Image Source: btglifestyle.com

IMDB Rating: 7/10

நம் லிஸ்ட்டில் அடுத்ததாக, 2016ம் ஆண்டு French-Belgian ஹாரர் டிராமா திரைப்படமாக வெளிவந்த Raw. கால்நடைப் பள்ளியில் படிக்கும் ஒரு பெண், சைவ உணவுகளை மட்டும் உண்பவர். ஒரு சமயத்தில் முதல் முறையாக இறைச்சியை சாப்பிடுகிறார். அதன் பிறகு மனித உடல்களை சாப்பிடும் அளவிற்கு சென்று விடுகிறார். அவவருக்கு என்ன நடந்தது என்பதே மீதி கதை. மிகவும் கோரமாக நீங்கள் நினைத்துகூட பார்க்காத காட்சிகள் கொண்ட திரைப்படம் இது.

2. The Conjuring – 2013

Image Source: Google

IMDB Rating: 7.5/10

இயக்குநர் ஜேம்ஸ் வான் இயக்கத்தில் உருவான மாஸ்டர் பீஸ் “தி காஞ்சூரிங்”. இதுவே முதல் பாகமாகும்., அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் எட் மற்றும் லோரைன் வாரன் ஒரு பண்ணை வீட்டில் நடக்கும் அமானுஷ்ய மர்மங்களை கண்டுபிடிக்கின்றனர். அங்கு என்ன நடந்தது ? அமானுஷ்யங்களுக்கான காரணம் என்ன? என்பதே மொத்த கதை.

1. Get Out (2017)

Image Courtesy: Universal Pictures

IMDB Rating: 7.7/10

இந்த பட்டியலில் முதலிடத்தில், 2017ம் ஆண்டு வெளியான சைக்காலஜிக்கல் ஹாரர் திரைப்படம் “Get Out” பிடித்துள்ளது. வெள்ளை இனத்தை சேர்ந்த தன் காதலி குடும்பத்தை சந்திக்க அவளுடன் செல்லும் கருப்பர் இன இளைஞர். அவர் காதலி வீடில் சந்திக்கும் மர்மங்கள் என்ன என்பதே மொத்த படத்தின் கதை. நம் இணைய தலைமுறையின் Must watch suggestion இந்த படம்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: