டிசம்பர் 16ம் தேதி வெள்ளிக்கிழமை எந்தெந்த ராசிகளுக்கு என்ன பலன் என்பதை கீழே பார்க்கலாம்.
மார்கழி 1
நட்சத்திரம்: உத்திரம்
திதி: தேய்பிறை அஷ்டமி
யோகம்: சித்த யோகம்
சந்திராஷ்டம் : மரம் (காலை 11 வரை)

மேஷம்
மேஷ ராசிக்கு இன்று நன்மைகள் நடைபெறும் நல்ல நாள். இன்று குருசந்திர யோகம் உள்ளதால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் நல்ல அமைதி ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிகாரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நல்ல நாள். தொழிலை விரிவு படுத்துவது குறித்து ஆலோசனை செய்யலாம்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியில் உள்ளவர்களுக்கு இப்போது பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அதிக தன லாபம் ஏற்படலாம். மகிழ்ச்சியான நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். நன்மைகள் அதிகம் நடைபெறக்கூடிய நல்ல நாள்.

கடகம்
கடக ராசிக்கு சிறப்பான நாள், பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நீண்ட நாள் வராமல் இருந்த பணம் வந்து சேரம். எல்லாவிதமான நன்மைகளும்நடக்கும் நல்ல நாள்.

சிம்மம்
சிம்ம ராசியில் சந்திரன் உள்ளதால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உள்ளது. இன்றைய நாள் உங்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் மகிழ்ச்சியான நாளாக அமையும்.

கன்னி
கன்னி ராசிக்கு இன்றைய தினம் அற்புதமான நல்ல நாள். யாராலும் செய்ய முடியாத விஷயத்தை முடித்து காட்டி நல்ல பெயர் வாங்குவீர்கள். பணம், கொடுக்கல் வாங்கல் அனைத்தும் சரியாக நடக்கும். பிரச்னைகள் முடிந்து செல்வ செழிப்பை சேர்க்கும் நாள்.

துலாம்
துலாம் ராசி நேயர்கள் அசையா சொத்து வாங்க வாய்ப்பு உள்ளது. தன லாபம் ஏற்படும் பொருளாதாரம், ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மிக சிறப்பான நன்மைகள் நடக்க உள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு நல்ல நன்மைகள் ஏற்பட கூடிய நல்ல நாள். செல்வ செழிப்பு அதிகமாகும், தொழில் முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் அமைதி ஏற்படும். அனைத்து நன்மைகளும் கிடைக்கும் நல்ல நாள்.

தனுசு
தனுசு ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி, குடும்பத்தில் அமைதி. பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். எடுத்த அனைத்துமே வெற்றியில் முடியக்கூடிய அற்புதமான யோகம் கொண்ட நல்ல நாள் இது.

மகரம்
மகர ராசிக்கு காலை சந்திராஷ்டமம் முடிகிறது. 11.20 வரை அமைதியாக இருங்கள். இந்த நாளின் பிற்பகுதியில் எல்லா விதமான நன்மைகளும் வந்து சேரும் நல்ல நாளாக அமையும்.

கும்பம்
கும்ப ராசிக்கு இன்று 11.20 க்கு பிறகு சந்திராஷ்டமம். முக்கியமான முடிவுகளை தள்ளிவைப்பது நல்லது. செலவுகள் அதிகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. அதிகமாக பேசாமல் இருப்பது நல்லது.

மீனம்
மீன ராசிகாரர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும், நல்ல காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. நல்ல விஷயங்கள் அனைத்தும் நடைபெறும் நல்ல நாளாக அமையும்.