தமிழ் சினிமாவின் முண்ணனி கதாநாயகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இந்த பொங்கலுக்கு அஜித் நடித்துள்ள ”துணிவு” மற்றும் விஜய்யின் ”வாரிசு” ஒரே நாளில் ரிலீசாவதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். இது முதல் முறை அல்ல, இதுவரை அஜித், விஜய்யின் 8 திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீசாகியுள்ளது. அதன் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்,

கோயம்பத்தூர் மாப்பிள்ளை – வான்மதி (1996)
1996 ம் ஆண்டு விஜய் நடித்த “கோயம்பத்தூர் மாப்பிள்ளை” மற்றும் அஜித்தின் “வான்மதி” திரைப்படங்கள் பொங்கல் விடுமுறைக்கு ரிலீசானது. வான்மதி ரிலீசாகி மூன்று நாட்களுக்கு பிறகு கோயம்பத்தூர் மாப்பிள்ளை ரிலீசானது. அந்த வருடத்தின் பொங்கல் விடுமுறையில் கோயம்பத்தூர் மாப்பிள்ளை மிகப்பெரிய ஹிட் அடித்தது.
குஷி – உன்னை கொடு என்னை தருவேன் (2000)
எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த “குஷி” மற்றும் அஜித்தின் ”உன்னை கொடு என்னை தருவேன்” இரண்டு படங்களும் 2000ம் ஆண்டின் மே மாதம் 19ம் தேதி வெளியாகின. விஜய்யின் குஷி படத்திற்கு, அஜித் திரைப்படத்தை விட பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
ப்ரண்ட்ஸ் – தீனா (2001)


2021ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் ”தீனா” மற்றும் விஜய்யின் “ப்ரண்ட்ஸ்” ரிலீசானது. இந்த காலகட்டத்தில் இருவரது ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு படங்களுமே வசூல் ரிதியாக வெற்றி படங்கள். தீனா படத்திற்கு பிறகே அஜித்தை அவரது ரசிகர்கள் அன்போடு “தல” என்று அழைக்க தொடங்கினர்.
பகவதி – வில்லன் (2002)
2002ம் ஆண்டு நவம்பர் மாதம் சரண் இயக்கத்தில் அஜித் நடித்த “வில்லன்”, ஏ.வெங்கடேஸ் இயக்கத்தில் விஜய் நடித்த “பகவதி” இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீசாகின. பகவதி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. வில்லன் அஜித் இரட்டை வேடங்களில் கலக்கியிருப்பார், காமெடி காட்சிகளும் சிறப்பாக இருக்கும்.
திருமலை – ஆஞ்சநேயா (2003)


2003 ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் திரைப்படம் விஜய் நடித்த “திருமலை” இந்த திரைப்படத்துடன் அஜித் நடிப்பில் வெளியான “ஆஞ்சநேயா” மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. விஜய்யின் மிகப்பெரிய ஹிட் கமர்ஷியல் ஹிட் திரைப்படம்.
ஆதி – பரமசிவன் (2006)
2006ம் ஆண்டின் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் “ஆதி”, அஜித் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி “ பரமசிவன்” என்ற படங்கள் வெளியாகின. இரண்டுமே ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. வசூலிலும் பெரிதாக இரண்டு படங்களும் சாதிக்கவில்லை.
போக்கிரி – ஆழ்வார் (2007)
2007 ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கும் போக்கிரி – ஆழ்வார் ஒரே நாளில் ரிலீசாகின. பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடித்த “போக்கிரி” மிகப்பெரிய வெற்றி. ஆழ்வார் திரைப்படம் பெரிய அளவில் ரசிக்கப்படவில்லை.
ஜில்லா – வீரம் (2014)

பின்னர், 7 ஆண்டுகளுக்கு பிறகு, 2014ம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் மற்றும் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன் லால் நடித்த “ஜில்லா” அந்த வருட பொங்கலுக்கு வெலீயாகின. இரண்டும் வசூல் ரிதியாக வெற்றி படம் என்றாலும் வீரம் படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. கிராமத்து பிண்ணனியில் படம் இருந்ததால் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
வாரிசு – துணிவு (2023)
2014ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் 2022ம் ஆண்டு அஜித் மற்றும் விஜய் படங்கள் ரிலீசாவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ஷோஷியல் மீடியா பக்கத்தில் இரண்டு ரசிகர்களும் மாறி மாறி தங்கள் நடிகரின் அப்டேட்டை பகிர்ந்து வருகின்றனர். 2023ம் வருட பொங்கல் ரிலீஸ் வின்னர் யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
One thought on “Ajith VS Vijay: இதற்கு முன் மோதிய படங்கள்?”