அஜித்தின் துணிவு படத்தை FDFS பார்த்துவிட்டு அஜித் ரசிகர் நமக்கு அனுப்பிய துணிவு Review- வை பார்க்கலாம்.

அஜித் ரசிகரின் துணிவு ரிவ்யூ
அஜித் குமார் அவர்களின் தீவிர ரசிகனாக துணிவு திரைப்பட விமர்சனம் ஒன்றை நேர்மையாக இங்கு குறிப்பிட ஆசைப்படுகிறேன்.
பெருத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு பொங்கல் திருவிழா நேரத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் துணிவு படம் பற்றிய நேர்கொண்ட பார்வையாக இதைப் பதிவிடுகிறேன்.
திரைக்கதையின் ஆரம்பமே வங்கி கொள்ளை என்பதை ஒரு குட்டி கதை மூலம் டைட்டில் காட்சிகளில் சொல்லி இருக்கலாம் அல்லது இது யாருக்கான கதையாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதையாவது சொல்லி இருக்கலாம், அதை தவிர்த்து ராஜதந்திரம் திரைப்பட நாயகனும், காவல் ஆய்வாளரும் கொள்ளையடிக்கும் திட்டம் தீட்டல், long ஷார்ட்’ல் வங்கி உள்புறம், வெளிப்புறம், சட்டென்று உள் நுழையும் அந்த டீம் என்று அவசரம் காட்டி பார்வையாளர்கள் பின்பற்ற அவகாசம் அளிக்காமல் திரைக்கதை நீண்டது.
ஹீரோ’வின் முதல் frame பிரம்மாண்ட மாஸாக இருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி சேர்த்திருக்கும் அஜித் குமாரின் காட்சிகள் 2022 era ஆடியன்ஸ்’ற்கு பழைய பஞ்சாமிர்தமாகத்தான் இருந்தது. புது வித யோசனைகளை அங்கு செயல்படுத்தி பழைய பாணி filmmaking’ர்க்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். அதுவே இந்த ட்ரெண்ட்’ல் எதிர்பார்க்கப்படுகிறதும், லைக் செய்யும் அளவிற்கும் இருக்கிறது.
நான் அரக்கன் ஆனால் எனக்குள் வேறொரு ஹியூமர் பக்கம் இருக்கிறது என கதைக்களத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு characterisation செய்தது மட்டுமல்லாது அதை ஆங்காங்கே வெளிப்படுத்தாமல் இடைவேளை வரை நீட்டித்து “எப்புட்றா” என்ற அளவிற்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
Logic’ஐ நீக்கிவிட்டு பார்த்தால் படம் நலம் தான் என விவாதம் செய்வது எந்த வகையில் சரி? தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்களில் ஒருவரிடம் logic திரைப்படங்களை எதிர்பார்க்காமல் வேறு யாரிடம் எதிர்பார்ப்பது? மக்கள் இன்றும் இந்த angle’ல் ஒரு விவாதப்பேச்சை தொடர்வது சினிமாவை ஆரோக்கிய பாதைக்கு இழுத்துச் செல்லாது.

500 கோடி, 5,000 கோடி பின் 25,000 கோடி என மக்கள் கற்பனையிலும் எண்ணிப்பார்க்காத ஒன்றை திரையில் அவர்களுக்குளே பேசி பங்கு பிரிக்க திட்டம் போடுவதும் அதை விறுவிறுப்பு காட்சிகள் மூலம் வலு சேர்ப்பதாக நினைத்து “வாம்மா மின்னலு” என்ற அளவிற்கு வேகம் காட்டி கதையையும், அதோடு பயணிக்கும் கதாபாத்திரங்களையும் பின்பற்ற முடியாமல் பார்வையாளர்கள் திகைத்துப்போய் நின்றதும் அனைவரும் திரையரங்கிள் கடந்து வந்த காட்சிகளே.
வங்கியின் முதன்மை அதிகாரியான வில்லன் சார்பட்டா புகழ் வேம்புலி அலைபேசி உரையாடலில் கனத்த குரலில் வீறுகொண்டு எழுந்தாலும், தன் வங்கியை ஆபத்திலிருந்து மீட்க “நான் இறங்குனா தான் இங்க எல்லா வேலையும் முடியுது” என்று கிளம்பி வங்கிக்குள்ள போன உடனே பாத்ரூம் பைப் திறந்து அழுவது போல ஹீரோ முன் சரண்டர் ஆவது ஆதாம், ஏவாள் காலத்து template.
நான் யாருன்னு உனக்கு ஒரு குட்டி கதை சொல்றேன்னு அதையும் ஹியூமர் கலந்து ஏகே ஆரம்பிக்க, நல்ல வேலை அந்த கதையை ஒரு song’ல் stuff பண்ணி சொல்லிட்டாய்ங்கன்னு மனசு லேசாக ஆறுதல் அடைந்தது. சமுத்திரக்கனி முதலில் திருடனை அடித்து, துவைப்பது பற்றி பன்ச் சொல்லிட்டு, கடைசில மேசியாவா தெரியுறதும் திருடனுக்கு வாழ்த்து சொல்றதெல்லாம் எந்த காலத்து template’ன்னு நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப் பாருங்க வாசகர்களே.
போன் கூட பயன்படுத்தாத ஒரு சர்வதேச குற்றவாளி பல நாடுகள் சுற்றி இந்தியா வந்து நல்லது செய்றதுக்கான காரணம் படத்தில் சொல்லியிருந்தாலும் அதையெல்லாம் மீம் கிரியேட்டர்கள் கணித்த திரைக்கதை தான், என்ன தான் predictable ஆக இருந்தாலும் grip இருந்திருந்தால் பிடிப்பு இருந்திருக்கும். திருடரில் சமூக நலன் கொண்ட ஒரு திருடர் என எடுத்துக்கொள்வதா?

மஞ்சு வாரியர் கதாபாத்திரம் முற்றிலும் கதைக்கு அப்பாற்பட்டே பயணிக்கிறது ஆனால் heroin அந்தஸ்து போஸ்டர்களில் தெரிகிறது. அசுரன் படத்தில் ஈட்டி எய்த கைகளுக்கு கிடைத்த கைத்தட்டல்கள் துணிவுடன் துப்பாக்கி ஏந்திய கைகளுக்கு கட்டாயம் கிடைக்கப்பெறாது. மீண்டும் பெண் கேரக்டர்களை சொற்பமாக சித்தரிப்பது மீண்டு வரும் சினிமாவிற்கு கருஞ்சாயம் பூசுவது போல் இல்லையா?
உங்களது கருத்துக்களும் இணைய தலைமுறையில் இடம்பெற வேண்டுமா?
இது போல உங்களது தரமான நல்ல பதிவுகளும் இணைய தலைமுறையில் இடம்பெற admin@inaiyathalaimurai.COM என்ற மின்னஞ்சலுக்கு உங்களது கண்டெண்டுகளை அனுப்புங்கள். எங்கள் குழு சரிபார்த்து பதிவிடுவார்கள்
வங்கி மற்றும் வங்கி செயல்பாடுகளில் நம்மில் அனைவருக்குமே அதிருப்தி இருப்பினும் அவற்றை நிராகரித்து இங்கு வாழ்கை நடத்த முடியாது என்பதே நிஜம். அப்படியொரு கட்டமைப்பிற்குள் உலகமே உள் வந்துவிட்டது. பணம் என்ற தாள் ஒரே நிறம், நீளம் கொண்டாலும் ஒவ்வொருவரிடமும் பயணப்படும்போது புதுப்புது கதைகளை உருவாக்கி நகர்கிறது. இதில் சாமர்தியமாய் இருந்தால் முதலும், முடிவுரையும் இன்பம் தரும், இல்லையேல் வேதனையே மிஞ்சும்!
அஜித் குமார் பிரம்மாண்ட உடல் அமைப்பைக் கொண்ட ஒரு நடிகர் அவர் துப்பாக்கி, பைக் racing, வீச்சருவா, கம்பு என மீண்டும் மீண்டும் திரையில் காட்சிப்படுத்துவது ஏற்புடையதா? இன்னும் எத்தனை காலம் அதற்காகவே சினிமாவை பார்ப்பது.
மக்கள் விழித்துக்கொண்ட நிலையில், இயக்குனர்கள், முன்னணி நடிகர்கள் பொது நலம் சார்ந்த கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் திரையுலகம் புத்துயிர் பெரும்.
மேலே உள்ள அனைத்து கருத்துக்களும் அஜித்தின் ரசிகர் நமக்கு அனுப்பியதே. நீங்கள் துணிவு படம் பார்த்துவிட்டீர்களா? எப்படி இருந்தது என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.