’துணிவு’ படத்தின் 3வது சிங்கிளான “கேங்க்ஸ்டா” இணையத்தில் வெளியாகி உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் ஜனவரி 12 ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தின் மூன்றாவது பாடல் “கேங்க்ஸ்டா” இன்று வெளியாகியுள்ளது. . இந்த பாடலை பாடகர் ஷபீர் சுல்தான் பாடியுள்ளார். துணிவு படத்தின் முதல் இரண்டு பாடல்களான ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதன் கடவுளடா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த பாடலின் வரிகளை சில தினங்களுக்கு முன் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் டிவிட்டரில் பகிர்ந்தனர்.


வாரிசு ஆடியோ லாஞ்ச் நேற்று விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்றால், இன்று துணிவு 3வது சிங்கிளை நாங்கள் கொண்டாட உள்ளோம் என்று அஜித் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.