உடல் எடையை குறைக்க Fat Burner எடுக்கலாமா?

Reading Time: 2 minutes

இன்று நிறைய பேருக்கு எழுந்துள்ள சந்தேகம் உடல் எடையை Fat Burning Supplements மூலம் குறைக்க முடியுமா? இதனை எடுப்பதால் உயிருக்கு ஆபத்தா? என்று, நான் உங்கள் பிட்னஸ் கோச் Biglee முரளி, இது தொடர்பான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

fat burners good for weigjt loss?

உடல் எடை அதிகமாக உள்ள பலரும் இன்று நினைப்பது வேகமாக எடையை குறைக்க வேண்டும் என்று, இந்த ஆசையை பயன்படுத்தி நிறுவனங்கள் மற்றும் சிலர் இதுபோன்ற Supplement’s- ஐ உருவாக்குகின்றனர். இதனை மொத்தமாக தடுக்க முடியுமா என்று தெரியாது. ஆனால் இதுகுறித்த தகவல்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உடல் எடை அதிகரிக்க காரணம்

அளவுக்கு அதிகமாக உடம்பில் செல்லும் எனர்ஜி பயன்படாமல் போகும்போது உடலில் கொழுப்பாக மாறுகிறது. தினசரி வாழ்வில் வேலைப்பளு குறைவதாலும், ஹார்மோனை பாதிக்கக்கூடிய பிராசஸ்ட் உணவுகளை உட்கொள்ளும் போது உடல் எடை கூடுகிறது. இதை சரி செய்ய உடற்பயிற்சி, Supplement முன்பாக பிராசஸ்ட் புட் உட்கொள்வதை முதலில் நிறுத்த வேண்டும்.

Fat Burning Supplements ஆபத்தானதா?

டயட் மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் முதலில் Supplement எடுப்பது ரிசல்ட் தராது. நாம் தவிர்க்க வேண்டிய Supplements குறித்து பார்க்கலாம். சில ஹெர்மல் பிராடக்ட்ஸ் உள்ளது. அவர்கள் உணவை தொடாமல் அவர்கள் கொடுக்கும் பவுடரை மட்டும் 3 முறையும் சாப்பிட சொல்வார்கள். உணவு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையதான் செய்யும் ஆனால் உடல் நலனுக்கு நல்லதல்ல. சில நாட்களில் உங்கள் எடை மீண்டும் ஏறிவிடும்.

Biglee Tamil YT

இதுபோன்ற மேலும் பிட்னஸ் தொடர்பான தகவல்களுக்கு

Biglee Tamil youtube சேனலை இங்கு கிளிக் செய்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள்
  • சமீபத்தில் ஒரு பையன், உடல் எடையை குறைக்க சப்ளிமண்ட் சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். சாப்பாடு சாப்பிடாமல் சப்ளிமண்ட் மட்டும் சாப்பிடுங்கள் என்று சொல்லும் கம்பெனியின் பக்கம் செல்லாமல் இருப்பது நல்லது.
  • Fat Burner என்ற சப்ளிமண்ட் சாப்பிடுவதால் உடல் எடை குறையாது, உங்கள் உடலில் உடல் எடை குறையும் தன்மையை அதிகப்படுத்த மட்டுமே உதவும். Ingredients என்ன சேர்க்கப்பட்டுள்ளது என்று உங்களது சப்ளிமண்டில் தெளிவாக கொடுக்கப்படவில்லை என்றாலே அதை தவிர்ப்பது நல்லது.

பாதிப்பு இல்லாமல் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்

  • Conjugate Linolic Acid (CLA) ஒமேகா 5 வெரைட்டி உள்ள ஃபேட்டி ஆசிட், இதை எடுத்தால் உங்களது கொழுப்பு குறைய உதவும் என்கிறார்கள், எந்த வித பாதிப்பும் இல்லாமல். இது சில இறைச்சிகளில் உள்ளது. நல்ல ஆரோக்கியமான இறைச்சியை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.
  • பிளாக் காஃபி ஒரு கிளாஸ் குடித்து விட்டு ஒர்க் அவுட் செய்ய செல்லும் போது நீங்கள் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை விட கொஞ்சம் எனர்ஜியாக எக்ஸ்ட்ரா செய்யலாம். இதையும் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம்.
  • L-Carnitine இது ஒரு அமினோ ஆசிட். புரோட்டினில் கிடைக்கும். இதுவும் உங்கள் கொழுப்பை குறைத்து இரத்த நாளங்களின் பாதுகாப்புக்கு உதவும்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: