The Pale Blue Eye மூவி ரிவ்யூ தமிழ்

Reading Time: < 1 minutes

The Pale Blue Eye ஹாலிவுட் படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

2022ம் ஆண்டில் ஒரு அமெரிக்க மிஸ்டரி திரில்லர் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் The Pale Blue. இந்த படத்தை ஸ்காட் கூப்பர் இயக்கியுள்ளார், 2003ம் ஆண்டு வெளியான லூயிஸ் பேயர்டின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

The Pale Blue Eye

The Pale Blue Eye Movie Review

1830 ஆம் ஆண்டில் ஹட்சன் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட அமெரிக்க இராணுவ அகாடமியில், ஒரு ராணுவ கேடட் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். அந்த கொலையை கண்டுபிடிக்க டிடெக்டிவான ஹீரோவை பணி அமர்த்துகிறார்கள். அவருடன் அகாடமியில் இருந்து இன்னொரு நபரும் அந்த கொலையை கண்டுபிடிக்க உதவுகிறார். குற்றவாளியை கண்டுபிடிக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கொலைகள் நடக்கிறது. இறுதியாக என்ன நடந்தது என்பதே கதை.

இது ஸ்லோ பர்னிங் மிஸ்டரி டிராமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வாய்ப்பு உள்ளது. Christian Bale, Harry Melling கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. அவர்கள் இருவரது நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். 1830ல் நடக்கும் கதைக்களத்தை கேமரா, ஆடை வடிவமைப்பு, மேக்கப், எடிட்டிங் உட்பட அனைத்து டெக்னிக்கல் ஆஸ்பெக்டிலும் சரியாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

மிஸ்டரி திரைப்படங்கள் அதிகம் பார்க்கும் நபராக இருந்தால் உங்களால் இதன் கிளைமேக்ஸை ஈஸியாக கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. மற்றபடி படம் ஸ்லோ டிராமா பார்க்கும் ரசிகர்களை நிச்சயம் கவர வாய்ப்பு உள்ளது. இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

இணைய தலைமுறை ரேட்டிங்: 3/5

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: