மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்து தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

கதை
மிகப்பெரிய கனவுகளுடன் இருக்கும் நாயகி ஸ்கூல் வாத்தியாரான படத்தின் ஹீரோவை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு அவர் கண்ட கனவுகள் அனைத்தும் சிதைந்து போகிறது. அந்த வீட்டில் என்ன நடந்தது என்பதே கதை.
விமர்சனம்
மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற படத்தின் ரீமேக் இந்த படம். இயக்குநர் ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாள படத்தின் ஒரிஜினாலிட்டி கெடாமல் இயக்குநர் படம் எடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்தர் கொடுக்கப்பட்டுள்ள காட்சிகள் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். இவர்களை தவிர நடித்துள்ள சப்போர்ட்டிங் கேரக்டர்கள் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம் என்று தோன்றியது.
படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பாலசுப்ரமனியம் ஒளிப்பதிவு எதார்த்தமாக காட்சிகளை உணர வைக்கிறது. லியோ ஜான் பால் எடிட்டிங் நகர்வுக்கு உதவுகிறது. மலையாள படத்தில் உள்ள காட்சிகளின் எதார்த்தம் மற்றும் அழுத்தம் இந்த படத்தில் இல்லை என்பதே உண்மை.
மொத்தமாக எப்படி இருக்கு என்று கேட்டால் மலையாளத்தில் இந்த படத்தை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் உங்களுக்கு அந்த அளவுக்கு இந்த படம் கவர வாய்ப்பில்லை. படம் புதிதாக தமிழில் பார்ப்பவர்களுக்கு ஒரு ஸ்லோ டிராமா பார்த்த அனுபவத்தை கொடுக்கலாம்.
இணைய தலைமுறை ரேட்டிங்: 3 /5