சமுத்திரகனி நடித்துள்ள ’தலைக்கூத்தல்’ மூவி ரிவியூ

Reading Time: < 1 minutes

ஜெயபிரகாஷ் இயக்கத்தில் சமுத்திரகனி, கதிர், வசுந்தரா நடித்துள்ள தலைக்கூத்தல் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

Thalaikoothal movie review

கதை

ATM வாட்ச்மேனாக வேலை பார்க்கும் சமுத்திரக்கனியின் அப்பா மோமா ஸ்டேஜில் இருக்கிறார். அப்பாவை மிகவும் சிரத்தை எடுத்து பார்த்து கொள்கிறார். ஆனால் அந்த அப்பாவுக்கு சின்ன வயதில் அவருடைய காதல் நினைப்பிலேயே இருக்கிறார். கடைசியில் அவருக்கு என்ன நடந்தது என்பதே கதை.

விமர்சனம்

தமிழ் சினிமாவில் ‘தலைக்கூத்தல்’ முறை பற்றி பேசும் மற்றொரு படம் இது. ஏற்கனவே பாரம் என்ற படத்தில் இது குறித்து அழுத்தமாக பதிவு செய்திருப்பார்கள். இந்த படம் அதுபோன்ற ஒரு கருத்தை எதார்த்தமாக பதிவு செய்ய எடுத்துள்ளார்கள். இந்த படத்தை இயக்கியுள்ளார் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஸ்ணன். முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரகனி, வசுந்தரா, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சமுத்திரகனி இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வசுந்தரா, கதிர் உள்ளிட்டோர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வசனங்களை மிகவும் அழகாக எழுதியுள்ளனர். கேமரா, இசை என்று அனைத்து டெக்னிக்கல் சைடும் படத்திற்கு பலமாகவே அமைந்துள்ளது. படத்தில் வரும் ப்ளாஷ் பேக் காட்சிகள் நமக்கு சிவாஜி கணேஷனின் ’முதல் மரியாதை’ படத்தை நினைவுக்கு கொண்டுவர வாய்ப்பு உள்ளது.

இந்த படத்தில் மொத்தம் இரண்டு கதைகள் ஒரே நேரத்தில் பயணிக்கிறது. முதல் கதை சமுத்திரக்கனியின் அப்பா கோமா ஸ்டேஜில் பல வருடமாக இருப்பதால் அவரது மனைவி மற்றும் குடும்பம் அவருக்கு தலைக்கு நீருற்றி கொல்ல சொல்கிறது. மறுபுறம் அவரது அப்பாவின் சிறுவயது காதல் கதை ப்ளாஷ்பேக் பயணிக்கிறது.

இரண்டு கதைகளிலும் உள்ள பிரச்னை நமக்கு என்ன நடக்கும் என்று தெரிந்துவிடுகிறது. அதனால் அவ்வளவு சுவாரசியமாக கதை நகரவில்லை. அப்பாவுக்காக போராடும் பையன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தில் அவரது அப்பா கேரக்டர் இல்லை. அவரது காதல் கதையை மட்டுமே முக்கியப்படுத்தி நகர்ந்ததால் அப்பா-பையன் செண்டிமெண்ட் சீன்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை.

இணைய தலைமுறை ரேட்டிங்: 2.5/5

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: