சென்னையில் இந்த அருவிக்கு போயிருக்கீங்களா?

Reading Time: 2 minutes

சென்னைக்கு மிக அருமையில் இல்ல… சென்னையிலே அருவியிருக்கு…

சென்னையில் ஆறு இருக்கிறது ஏன்றால் ஏற்றுக்கொள்வார்கள். கூவம், அடையாறு எல்லாம் ஆறு தானே என்று. ஏரி இருக்கிறது என்றாலும் வீராணம், செம்பரம்பாக்கம், பூண்டி, வேளச்சேரி, கொரட்டூர் ஏரிகள் இருக்கு. சென்னையில ஒரு அருவி இருக்ககு… அட ஆமாங்க சென்னையிலதான் அருவி இருக்கு.

மலையிலருந்து வாந்தா தான அருவி… சென்னையில் ஏது மலை அருவி? என்று கேட்டீங்கனா. மலையில் இருக்கும் அருவி அளவு பெருசா இல்லனாலும், ஒரு குட்டி அருவி இருக்குங்க… சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் தான் அந்த அழகான அருவி இருக்கு.

நல்ல மழை பெய்ததால் சுற்றிலும் உள்ள காடு நல்ல பசுமையாக காட்சியளிக்கிறது. அதற்கு நடுவே, நிறைந்து வழியும் ஏரி, சிறிய நீர்வீழ்ச்சி என இந்த இடமே மிகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாக தெரிகிறது. இது எட்டு அடி நீர்வீழ்ச்சி தான். அதனால் பெண்களும் குழந்தைகளும் எந்த பயமும் இன்றி குளிக்க ஏற்றதாக உள்ளது. இது மலைகளில் இருந்து விழும் அருவியில் குளிப்பது போல் ஒரு உணர்வை கண்டிப்பாக கொடுக்கும்.

எப்போதும் நகரத்திற்கு உள்ளேயே சுத்திக்கிட்டு இருக்கறத விட, குழந்தைகளை இயற்கை எழில் கொஞ்சும் இது மாதிரியான இடத்திற்கு கூட்டிட்டு போக இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

இயற்கை குழலில் அருவியை பார்க்க விரும்புவோர், பட்ஜெட்ல நமக்கு பக்கத்திலேயே அந்த அனுபவத்தை இந்த அருவி கொடுக்கும். பட்ஜெட்டும் கம்மி, காலையில போனா, குழந்தைகளுடன் குளித்துவிட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கே வந்துடலாம்.

ஏரியும் பெருசா ஆழமில்லை. ஏரியின் முழு அழகைக் காண அருகே படிக்கட்டுகளுடன் கூடிய உயரமான இடங்கள் இருக்கு. அதில் ஏறி, இந்த ஏரியின் ரம்யமான காட்சியைக் காணலாம்.

ஏரிக்கு எப்படி போவது…?

OMR சாலையில் உள்ள கேளம்பாக்கத்தை பேருந்து மூலம் அடையலாம். கேளம்பாக்கத்தில் இருந்து ஒரு ஆட்டோ பிடித்தால் 2 கிமீ தூரத்தில் தையூர் வந்துவிடும். ஊருக்கு நடுவே ஒரு கோவில் இருக்கும். அங்கிருந்து 100 மீட்டர் தூரத்தில் ஏரியையும் அருவியையும் இருக்கு. இருசக்கர வாகனத்தில் OMR வழியாக வந்தால் ஒரு லாங் ரோட் ட்ரிப் வந்த எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்.

அப்பறம் என்ன யோசிக்கீறிங்க.. எடுங்க பைக் சாவிய…. ஒரு ட்ரிப் போயிடலாம்..

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: