வருடத்தில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய 3 மாதங்களில் வரும் அமாவசை மிகவும் சிறப்பானது. இந்த அமாவசையின் போது என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

தை அமாவாசையின் போது நமது பித்ருக்களுக்கு முறைப்படி வழிபாடு செய்து பித்ருக்கடனை அடைக்க வேண்டும். இதன் மூலம் நம் வாழ்வில் நிம்மதி பெருகும், வாழ்க்கையில் ஏற்றம் வரும், காரியங்கள் தடையின்றி நடக்கும். எனவே இதனை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அமாவாசை வழிபாடு பழக்கம் இல்லாவிடினும் செய்தால் வாழ்வில் முன்னேற்றம் நடப்பதை கண்கூடாக பார்க்கலாம்.
நம்முடைய பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் பிரச்னைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வரும் தை அமாவாசை நாளில் நாம் மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.
இந்த வருடம் தை அமாவாசை ஜனவரி 21ம் தேதி வருகிறது. சர்வ அமாவசையாக இருக்கும் காரணத்தால் காலை முதல் மாலை வரை வழிபாடு செய்யலாம். பித்ருக்களுக்கு செய்யும் வழிபாட்டை சூர்ய உதயத்திற்கு பிறகுதான் செய்ய வேண்டும். உங்களுடைய குலதெய்வத்திற்கு பூஜை செய்ய வேண்டும். ஆண்களில் அப்பா, அம்மா யாரேனும் ஒருவர் இல்லையென்றாலும் இந்த கடனை செய்ய வேண்டும்.
இந்த தினத்தில் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புதிய ஆடைகள் ஆகியவற்றை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என கூறப்படுகிறது. மதியம் 12 முதல் – 1 மணி வரையில் இலையில் இறந்தவர்களுக்கு படையல் போடலாம். அவர்களுக்கு என்ன உணவு இருக்குமோ அதை வைத்து கடனை நிறைவேற்றலாம்.
மாலை நமது முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். மேலும் இந்த நாளில் 4 பேருக்கு அன்னதானம் செய்வதால் பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
மேலும் நிறைய பேர் கேட்பது, அமாவசையின் போது கோலம் போடலாமா? அமாவாசையின் போது கோலம் போடக்கூடாது. அப்படி போட நினைத்தால் பித்ருக்கடனை நிறைவேற்றிய பிறகு நீங்கள் உங்கள் வீட்டு வாசலில் கோலம் போடலாம். பெண்களும் அனைத்து வழிபாடுகளும் செய்யலாம். எள், தண்ணீர் மட்டும் தெளிக்கக்கூடாது.
தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இந்த ஆண்டு தை அமாவாசை 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உங்களது முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் இன்னும் பல நன்மைகள் வந்து சேரும்.