Tecno Phantom X2 Pro மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் பிற விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டெக்னோ நிறுவனம் மற்றொரு பிரீமியம் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Phantom X2 Pro போர்ட்ரெயிட் கேமரா லென்ஸுடன் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி 710 எம்சி 10 ஜிபியு மற்றும் ஹைப்பர் எஞ்சின் 5.0 உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட் மூலம் இயங்குகிறது. டெக்னோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே பார்க்கலாம்.
Tecno Phantom X2 Pro விலை
டெக்னோ Phantom X2 Pro 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999 ஆகும். இது அமேசானில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 24 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.
அறிமுக சலுகையாக ரூ .5,000 எக்சேஞ்ச் போனஸ் மற்றும் 12 மாத அமேசான் பிரைம் மெம்பர்சிப் மற்றும் 6 மாத நோ காஸ்ட் EMI வசதி ஆகியவை கிடைக்கும். டெக்னோ Phantom X2 Pro-வை வாங்கும் முதல் 600 வாடிக்கையாளர்களுக்கு இந்த நிறுவனம் இலவச டெக்னோ பரிசுகளை வழங்குகிறது. மூன்லைட் சில்வர் மற்றும் ஸ்டார்டஸ்ட் கிரே ஆகிய கலர்களில் இந்த மாடல் கிடைக்கும்.
Tecno Phantom X2 Pro வசதிகள்
டெக்னோ Phantom X2 Pro ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் முழு எச்டி அமோலேட் ஸ்கிரினை கொண்டிருக்கும். டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டுள்ளது. இந்த மொபைல் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 5 ஜி ப்ராசஸர் மூலம் இயங்குகிறது, இது மாலி-ஜி 710 எம்சி 10 ஜிபியு மற்றும் ஹைப்பர் எஞ்சின் 5.0 உடன் அறிமுகமாகிறது.
இந்த மாடல் 12 ஜிபி ரேம் உடன் வருகிறது, Tecno Phantom X2 ஆண்ட்ராய்டு 12 வெர்சனை கொண்டிருக்கும், இது HiOS 12.0 ஸ்கின் அடிப்படையிலானது. இந்த ஸ்மார்ட்போன் யூ.எஸ்.பி டைப்-சி மாடல் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் பேட்டரி 5,160 MAH திறனை கொண்டுள்ளது.