மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு பச்சிளம் குழந்தை பிரிவிற்காக காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளன.

வேலை விபரம்
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) – சம்பளம் ரூ. 10,000
காவலர் (Security) – சம்பளம் ரூ. 8,500
பல்நோக்கு மருத்துவ பணியாளர் – சம்பளம் ரூ. 5,000
தூய்மை பணியாளர் – சம்பளம் ரூ. 5,000
காவலர் (Security) – சம்பளம் ரூ. 8,300
குறிப்பு
ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை- 20,
பிரிவு பொது – 8 (G8) ஆகும்.
விண்ணப்பபங்கள் நேரிலோ/ தபால் மூலமாகவோ அனுப்பலாம்.