2022ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் நிறைவு பெற உள்ளது. டிசம்பர் 30ம் தேதி நிறைய தமிழ் படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளன.

செம்பி
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், கோவை சரளா, அஸ்வின் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “செம்பி”. இந்த திரைப்படம் டிசம்பர் 30ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராங்கி
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திரிஷா நடிப்பில் “ராங்கி” திரைப்படம் 30ம் தேதி தியேட்டரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவர் ஜமுனா
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் “டிரைவர் ஜமுனா” நீண்ட நாட்களுக்கு முன் வெளியாக வேண்டிய இந்த திரைப்படம் டிச, 30ம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.
OMG
அறிமுக இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், சதீஷ், யோகி பாபு நடித்துள்ள “ஓ மை கோஸ்ட்” டிசம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது.
தமிழரசன்
பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்ப்பில் உருவாகியுள்ள “தமிழரசன்” டிசம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது.
மேலும், சகுந்தலாவின் காதலன், டியர் டெத், வா அருகில் வா, காலேஜ் ரோடு, அருவா சண்ட, ஓங்காரம் ஆகிய சிறிய படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
