இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான State Bank of India தனது வாடிக்கையாளர் அக்கவுண்ட்டில் இருந்து, 147 ரூபாய் 50 பைசாவை பிடித்தம் செய்திருக்கிறது.

இது ATM கார்டின் ஆண்டு பயன்பாட்டு சந்தாவுக்கான சேவை கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வருடம் முழுவதும் ATM கார்டு பராமரிப்புக்காக 125 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. பிறகு ஏன் 147.50 ரூபாய் பிடித்தார்கள் என யோசிக்கலாம். அதற்கு ஜிஎஸ்டி யார் கட்டுவதும் அதுவும் நாம்தான். 125 ரூபாயக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி மொத்தமா 147 ரூபாய் 50 பைசா.
இது மட்டும் இல்ல, டெபிட் கார்டு மாற்றி கொடுக்க 300 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியை சேர்த்துதான் வங்கிகள் வசூலிக்கிறது.
நாட்டில் 22,309 வங்கிக் கிளைகள் மற்றும் 65,796 ஏடிஎம் மையங்கள் என மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்டுள்ளது எஸ்பிஐ.
ஏடிஎம் கார்டுகளுக்கான ஆண்டு சந்தா பிஎன்பி வங்கியில் அதிகபட்சமாக ரூ.500 வரை உள்ளது. அதுவே ஹெச்டிஎப்சி வங்கியில் ரூ.200 முதல் ரூ.750 வரையில் உள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் ரூ.99 முதல் ரூ.1,499 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.