Pathaan Movie Review: பதான் தமிழ் விமர்சனம்

Reading Time: < 1 minutes

ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் தமிழ் டப்பிங்கில் வெளியாகியுள்ள ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘பதான்’ எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

Pathaan movie review

கதை

இந்தியாவை அட்டாக் செய்ய திட்டமிடும் ஒரு தீவிரவாத கும்பலை தடுக்க ஒரு ஸ்பை ஏஜெண்டான ஷாருக்கானை அழைத்து வருகின்றனர். அவர் எப்படி தடுத்தார் என்பதே மீதிக்கதை.

விமர்சனம்

பதான் கமர்சியல் ஆடியன்ஸ்க்கான திரைப்படம். ஷாருக்கான் செம ஸ்டைலிஷாக நடித்துள்ளார். ஷாருக்கான் ரசிகர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கலாம். ஓபனிங் காட்சிகளில் இருந்து இறுதிவரை ஆக்சன் காட்சிகளில் அசத்தியுள்ளார். அவருடன் இணைந்து தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளர். தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் படம் முழுவது பயணிக்கும் கேரக்டர். ஜான் ஆப்ரஹாம் வில்லனாக நடித்துள்ளர்.

இவர்களை தவிர நடிகர் சல்மான் கான் ஒரு ஆக்‌ஷன் காட்சியில் கேமியோ செய்துள்ளார். அந்த காட்சி தியேட்டரில் மிகப்பெரிய கைதட்டலை பெறும். ஆக்‌ஷன் காட்சிகள் மிகப்பெரிய ப்ளஸ். அதனை படமாக்கிய விதத்திற்கு பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தில் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் என்பதால் அதன் இசை, கேமரா மற்றும் ஒளிப்பதிவு அந்த காட்சிகளைமேலும் பிரம்மாண்டமாக திரையில் தெறிக்க விடுகிறது. பாடல்களில் தீபிகாவின் கவர்ச்சி அவர்களை ரசிக்க வைக்கும். பாடல்கள் மற்றும் பிண்ணனி இசை சுமார் தான்.

ஆக்‌ஷன் காட்சிகளை தவிர படத்தின் அனைத்து காட்சிகளும் பல படங்களின் காட்சிகளை சேர்த்து எடுத்துள்ளார்கள். லாஜிக் இல்லாத காட்சிகள் என்று எதை சொல்வது என்று தெரியாத அளவிற்கு நிறைய காட்சிகள் உள்ளது. இன்னும் கதாபாத்திரங்களை வடிவமைத்ததில் சரியாக மெனக்கட்டிருக்கலாம். ஜான் ஆப்ரஹாம் மற்றும் தீபிகா வின் கதாபாத்திரங்கள் மீதான சந்தேகம் படம் முழுவதும் இருக்கும்.

படம் எப்படி இருக்கு என்று கேட்டால் லாஜிக் இல்லாத காட்சிகள் ஆனாலும் பாட்டு, ஃபைட்டு என கமர்ஷியல் ஆடியன்ஸை குறிவைத்து எடுத்துள்ளார்கள். பார்க்க விரும்புவர்கள் பார்த்து மகிழலாம்.

இணைய தலைமுறை ரேட்டிங்: 2.5/5

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: