2023ம் ஆண்டின் சோம வார விரத தேதிகள், விரத பலன்கள் மற்றும் எப்படி கடைபிடிப்பது என்று பார்க்கலாம்.

சோம வாரம் என்றாலே கார்த்திகை சோம வாரம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் எல்லா மாதமும் வரும் சோம வார நாட்களும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் 21 வார கணக்கில் நாம் சோம வார விரதத்தை கடைபிடிக்கும் போது மிகவும் விஷேசசம். ஆடி மாதத்தில் இந்த விரதத்தை தொடங்கினால் கார்த்திகை மாதம் நிறைவடையும். 21 வாரம் இந்த விரதம் இருந்தால் சிவ பெருமான் அருள் கிட்டும், நோய் நீங்கும், கடன் பிரச்னை, இல்லற பிரச்னைகள், குழந்தை வரம் உட்பட அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
சோம வார வரலாறு
சோமன் என்று அழைக்கக்கூடிய சந்திரனுக்கு யாருக்கும் கொடுக்காத பல முக்கியத்துவத்தை சிவ பெருமான் வழங்கியுள்ளதாக கூறுகிறார்கள். சோமனை தான் சூடிக்கொண்டு சோம நாத மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். அதனால் அவருக்கு சந்திர மவுளிஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. அந்த கருணையை வெளிப்படுத்தும் விதமாக இந்த விரதம் நடக்கிறது. இந்த சோம வாரம் சிவ பெருமானுக்கு அதி விஷேசமானது.
விரதம் கடைபிடிக்கும் முறை
காலையில் எழுந்து நீராடி சிவபெருமானை லிங்கமாக வைத்திருந்தால் தண்ணீர், பால் விட்டு அபிஷேகம் செய்யலாம். சிவன் பார்வதி இணைந்து படமாக வைத்திருந்தால் வில்வம் வைத்து அர்ச்னை செய்வது மிகவும் சிறப்பு. காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ளலாம். உங்கள் உடல் நிலையை பொறுத்து இதை திட்டமிட்டு கொள்ளுங்கள். பால், பழம் அல்லது உணவில் வைத்து நெய்வேத்யம் செய்யலாம். இந்த நாளில் சிவபுராணம் பாராயணம் செய்யலாம்.
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
2023ம் ஆண்டு சோம வார விரத நாட்கள்
தேதி | விஷேச நேரம் |
ஜனவரி 23 திங்கள் | நேரம் : Jan 24, 7:13 AM |
பிப்ரவரி 20 திங்கள் | நேரம் : Feb 21, 6:59 AM |
மார்ச் 27 திங்கள் | நேரம் : Mar 28, 6:27 AM |
ஏப்ரல் 24 திங்கள் | நேரம் : Apr 25, 6:02 AM |
மே 22 திங்கள் | நேரம் : May 23, 5:46 AM |
ஜூன் 19 திங்கள் | நேரம் : Jun 20, 5:45 AM |
ஜூலை 17 திங்கள் | நேரம் : Jul 18, 5:55 AM |
ஆகஸ்ட் 21 திங்கள் | நேரம் : Aug 22, 6:09 AM |
செப்டம்பர் 18 திங்கள் | நேரம் : Sep 19, 6:18 AM |
அக்டோபர் 16 திங்கள் | நேரம் : Oct 17, 6:28 AM |
நவம்பர் 13 திங்கள் | நேரம்: Nov 14, 6:43 AM |
டிசம்பர் 18 திங்கள் | நேரம் : : Dec 19, 7:06 AM |