இன்று நம் அனைவரது வாழ்க்கையிலும் மொபைல் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதில் சோஷியல் மீடியா அக்கவுண்ட் நிறைய பேர் வைத்துள்ளனர். சிலர் தினசரி பதிவுகளை செய்கின்றனர், சிலர் சோஷியல் மீடியா உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மட்டும் பயன் படுத்துகின்றனர்.

இன்று பிராடக்ட் ப்ரோமோசன், பிராண்டை வெளியில் தெரிய வைப்பது என்று சோஷியல் மீடியா, பிசினஸ் வைத்திருப்பவர்களுக்கு இன்றியமையாத ஒரு இடமாக மாறிவிட்டது. இதன் மூலம் அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களை எளிதாக ரீச் செய்ய முடிகிறது.
சோஷியல் மீடியாக்கள் உங்களது பிசினஸை ப்ரோமோட் செய்ய முக்கியமான இடம். இதில் பல நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளது. அதனை சரியாக புரிந்து கொண்டால், சோஷியல் மீடியா மூலம் பிராண்டை சுலபமாக பெரிதுபடுத்த முடியும்.
சோஷியல் மீடியா ஏன் தேவை?
சோஷியல் மீடியாவில் சிலர் தேவையில்லாத நெகட்டிவிட்டியை பரவ செய்வார்கள். அவர்களை தவிர்ந்துவிட்டு பார்த்தால் நமக்கு தேவையான நிறைய நல்ல விஷயங்கள் இதில் உள்ளது.

மகிழ்ச்சியை கொடுக்கும்
சோஷியல் மீடியாக்களில், உங்களை போன்ற ஒத்த ஆர்வம் கொண்ட மக்களுடன் குரூப் மற்றும் கம்யூனிட்டிகளில் சேர்வதன் மூலம் நீங்கள் விரும்பும் டாபிக்கை பேசலாம். எடுத்துகாட்டாக உங்களுக்கு படிப்பது மிகவும் பிடிக்கும் என்றால் உங்களுக்கு நிறைய நல்ல புத்தகங்களின் பரிந்துரை கிடைக்கும். மேலும் சோஷியல் மீடியாக்களில் நல்ல மீம்ஸ்கள் கிரியேட் செய்து ஷேர் மூலம் உங்களது கிரியேட்டிவிட்டியை மற்றும் மற்ற திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் பிராண்டை விரிவு படுத்தலாம்
நீங்கள் ஏதேனும் தொழில் வைத்திருப்பவராக இருந்தால் சோஷியல் மீடியா ப்ரோமோசன் மூலம் உங்களது தொழிலை பல்வேறு நாடுகள் வரை விரிவுபடுத்தலாம். உலகம் முழுவதும் 4.2 மில்லியன் சோஷியல் மீடியா பயனர்கள் உள்ளனர். உங்களது வாடிக்கையாளரை நீங்கள் எளிதாக சென்றடைய இது உதவும்.
வாடிக்கையாளர் சேவை எளிது
உங்களது வாடிக்கையாளரின் கேள்விக்கு உங்களது பிசினஸ் சோஷியல் மீடியா கணக்கிலிருந்து உடனடியாக பதிலளிப்பதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு ஏற்படும். 24 மணி நேரத்திற்குள் நாம் கொடுக்கும் அந்த பதில் வாடிக்கையாளருக்கு நம் பிராண்டின் மீது உள்ள மதிப்பை உயர்த்தும்.
டார்கெட் ஆடியன்ஸை ஈசியாக ரீச் செய்ய முடியும்
Demographic data மற்றும் சோஷியல் மீடியா post analysis மூலம் நமது டார்கெட் ஆடியன்ஸ் யார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் உங்களது பிசினஸ் திட்டத்தை சரி செய்து அவர்களுக்கு பிடித்த கன்டெண்டுகள் மற்றும் பிராடக்டுகள் மூலம் பிசினஸை பெரிது படுத்தலாம்.
வெளிப்படை தன்மையை அதிகரிக்க வேண்டும்
உங்களது பிசினஸில் நீங்கள் வாடிக்கையாளர்களிடம் காட்டும் வெளிப்படை தன்மை உங்களது நிறுவனம் வளர மிகவும் உறுதுணையாக இருக்கும். 86 % வாடிக்கையாளர்கள் நிறுவனங்களிடமிருந்து வெளிப்படை தன்மையை எதிர்பார்க்கின்றனர். இதனை அதிகரிப்பது மூலம் பல சிக்கல்களும் ஏற்படலாம் ஆனால் இந்த செயல் அதிக வாடிக்கையாளர்களால் பாரட்டைப் பெறுகிறது. தாங்கள் நம்பும் பிராண்ட் பொருட்களை மட்டுமே வாங்குவார்கள், நண்பர்களுக்கும் பரிந்துரை செய்வார்கள்.
சோஷியல் மீடியாவில் உள்ள தீமைகள் என்ன?
சோஷியல் மீடியாவில் உள்ள நன்மைகளை எப்படி மறுக்க முடியாதோ அதே போன்றே இதனால் ஏற்படும் தீமைகளையும் மறுக்க முடியாது. இதனால் ஏற்படும் தீமைகள் என்பதை கீழே பார்க்கலாம்.

சோஷியல் மீடியா அடிக்சன் மற்றும் மனநல பாதிப்புகள்
உலகம் முழுவதும் பெரும்பாலான இளைஞர்கள் சோஷியல் மீடியாவிற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் அவர்களுக்கு மன நல பாதிப்புகள் அதிகமாக ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 2 மணி நேரம் சோஷியல் மீடியா பயன்படுத்துபவர்கள் அரை மணிநேரம் பயன்படுத்துபவர்களை விட அதிகமாக இந்த சமூகத்திலிருந்து தனித்து இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
பரவி வரும் தவறான தகவல்கள்
பரவி வரும் ஷோசியல் மீடியா பக்கங்களினால் தவறான தகவல்களும் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாகும். எனவே ஒரு சிலர் தவறான தகவல்கலை பாலோ செய்து உயிரிழக்கும் நிலைக்கும் சென்றுள்ளனர். எனவே தகவல்களை பின் பற்றும்போது அதனை நிபுணர்களிடம் இருந்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உங்களது பிரைவசி பாதிக்கலாம்
உங்கள் கணக்கை பப்ளிக் புரொபைலாக சோஷியல் மீடியாவில் வைத்தால் யார் வேண்டுமானாலும் உங்கள் கணக்கை பார்க்கலாம். 2022ம் ஆண்டு 82% மக்கள் பிரைவசியை விரும்புவாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் ஹேக்கர்கள் போன்ற சமூக அச்சுறுத்தவாதிகளால் உங்கள் புரொபைலுக்கு ஆபத்து உண்டு. இதனை சரி செய்ய உங்கள் கணக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.
சோஷியல் மீடியா ஸ்கேம்ஸ்
சோஷியல் மீடியா பயன்படுத்தி, நிறைய ஸ்கேம்கள் நடக்கிறது. நிறைய பேர் போலி அடையாளங்கள் மூலம் பணத்தை பறித்து வருகின்றனர். எனவே இது போன்ற ஸ்கேம்மர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.
நெகட்டிவிட்டி அதிகமாக இருக்கும்
நாம் எது போஸ்ட் செய்தாலும் 20 பேர் அதை பாராட்டினால் சிலர் அதுகுறித்து நெகட்டிவான கருத்துக்களை தெரிவிப்பார்கள். சோஷியல் மீடியாவில் மீம்ஸ் மெட்டீரியலாக மாறிவிடக்கூடாது என்று பயந்து பலரும் இதிலிருந்து ஒதுங்கியுள்ளனர். சிலர் அந்த நெகட்டிவிட்டிக்களை பாசிட்டிவாக மற்றி சாதித்துள்ளனர்.
மொத்தமாக, சோஷியல் மீடியாவால் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே உள்ளது. எனினும் இந்த காலக்கட்டத்தில் இது இன்றியமையாத ஒன்றாகவே உள்ளது. இவற்றை சரியாக புரிந்து கொண்டு உங்களையும், உங்கள் பிராண்டுகளையும் முன்னேற்றி கொள்ளாலாம்.