டிராவல் பிரியர்களுக்கு அடுத்த அட்வஞ்சர் ரெடி! சிறுமலையில் உள்ள வெள்ளிமலையில் 500 ஆண்டுகள் பழமையான சிவ லிங்கம் உள்ளது.

சிறுமலை பயணம்
தமிழகத்தில் பலருக்கும் தெரியாத மலைப்பிரதேசம் இந்த சிறுமலை. இங்கு பசுமையான காடுகள், மூலிகை மரங்கள் உள்ளது. மொத்தம் 18 ஹேர்பின் பெண்டுகள் உள்ளன. திண்டுக்கல் மற்றும் மதுரையில் உள்ள மக்களுள் அதிகம் செல்லும் வார இறுதி ஸ்பாட். மதுரையிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சியிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த இடம் உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த சிறுமலை மலைத்தொடர்கள். 17வது ஹேர்பின்னில் ஒரு கண்காணிப்பு கோபுரம் உள்ளது மற்றும் கீழே உள்ள இயற்கைக்காட்சிகளை வசீகரிக்கும் வகையில் இங்கு பார்வையாளர்கள் நிறுத்தம் உள்ளது.

அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் மற்றும் வெள்ளிமலை முருகன் கோவிலுக்கு அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். அரிய வகை தாவரங்கள் மற்றும் புள்ளிமான், குரைக்கும் மான், எலி மான் போன்ற மான் வகைகள் இங்கு காணப்படுகிறது. காட்டுப்பன்றி, சோம்பல் கரடி, குள்ளநரி, காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற மற்ற காட்டு விலங்குகளும் இந்த இடத்தில் வசிக்கின்றன. சுற்றி பார்க்க போட் ஹவுஸ் , தோட்ட பகுதிகள் மட்டும் தான் இருக்கின்றன. இங்கு கிடைக்கும் வாழைப்பழம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலம்.
சிறுமலை புராண முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு உள்ள சஞ்சிவினி மலை இராமயணத்தில் ஹனுமன் தூக்கி சென்ற சஞ்சிவினி மலையில் இருந்து ஒரு துண்டு விழுந்து அதுவே இங்கு இருப்பதாக கருதப்படுகிறது.
பர்வதமலை ஏறி சிவதரிசனம் செய்துள்ளீர்களா?
பர்வதமலை சிவன் கோவில் வரலாறு, பயணம் குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்
வெள்ளிமலை சிவன் கோவில்
சிறுமலையில் உள்ள மிக உயர்ந்த மலைபகுதி வெள்ளிமலை. இது அகஸ்தியர்புரத்தில் உள்ளது. ஒரு காலத்தில் இம்மலை உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்ததாகவும், கலியுகத்தில் இது திருடப்பட்டு விடுமோ என அஞ்சிய அகஸ்த்தியர்,இதனை பாறையாக மாற்றிவிட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிமலையின் உச்சியில் 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. 30 – 45 நிமிடங்கள் நடந்து சென்றால் நாம் இந்த உச்சியை அடைந்து விடலாம். இந்த மலைக்கு செல்லும் வழியில் சூலாயுதம் மற்றும் சிவன் வைத்து கோவில் பராமரிப்பாளர்கள் தற்போது வைத்துள்ளனர். அது பயணிப்பவர்களை மிகவும் கவர்ந்து வருகின்றது.

இந்த மலையின் உச்சிக்கு செல்லும் வழியில் இடது பக்கத்தில் ஒரு குகை உள்ளது. அந்த குகை மலை உச்சியில் இருக்கிறது. நாம் குணிந்துதான் அந்த குகையை பார்க்க முடியும். அங்கு ஒரு லிங்கம் உள்ளது. இது வெள்ளி மலை பயணிக்கும் அதிகம் பேருக்கு தெரியாது.

மேலே உள்ள புகைப்படம் தான் வெள்ளிமலை சிவன், இவரைகாணவே அனைவரும் டிரக்கிங் செய்து தரிசித்து வருகின்றனர். இன்னும் ஏன் வெயிட்டிங். இந்த வார இறுதிக்கு நீங்களும் பிளான் போடுங்க. முக்கியமான விஷயம் , அங்கு சென்று தங்குமிடம் ஏற்பாடு செய்வது கடினம், எனவே முன் கூட்டியே தங்குமிடத்தை புக் செய்து கொள்ளுங்கள்.