SBI PO Prelims Result 2022 ரிசல்ட் அப்டேட்

Reading Time: < 1 minute

SBI PO Prelims Result 2022 தேர்வு எழுதியவர்கள் sbi.co.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI PO Prelims Result 2022

SBI PO Prelims Result 2022

எஸ்பிஐ பிஓ பிரிலிம்ஸ் முடிவு 2022 ஐ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்வு எழுதியவர்கள் sbi.co.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். Bankersadda செய்தியின் படி, 2022 டிசம்பர் 17, 18, 19 மற்றும் டிசம்பர் 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற்ற எஸ்பிஐ பிஓ பிரிலிம் முடிவு 2022 அறிவிக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்வின் மூலம், வங்கியில் மொத்தம் 1673 காலியிடங்கள் நிரப்பப்படும்.

SBI வெப்சைட்டில் லாகின் செய்ய, தேர்வு எழுதியவர் தனது பதிவு எண் / ரோல் எண் மற்றும் கடவுச்சொல் / பிறந்த தேதியை வெப்சைட்டில் நிரப்ப வேண்டும். மாணவர்களின் வசதிக்காக, முடிவுகளை சரிபார்த்து எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

SBI PO Prelims Result/ Scorecard 2022 டவுன்லோடு செய்வது எப்படி?

  • ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்திற்குசெல்லுங்கள் www.sbi.co.in/web/careers.
  • முகப்பு பக்கத்தில், “Download SBI PO Prelim Result 2023.” கிளிக் செய்யுங்கள்
  • registration number/Roll Number, and date of birth உள்ளிட்ட லாகின் விவரங்களை நிரப்புங்கள்
  • உங்களுடைய SBI PO Prelims Result 2022 இப்போது திரையில் தெரியும்
  • உங்களது ரிசல்ட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

SBI மெயின் தேர்வு தேதிகள்

இந்த பிரிலிம்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வு 2023 ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. தேர்வு தேதிகள் மற்றும் பிற தகவல்கள் குறித்த கூடுதல் விளக்கங்கள், பிற தகவல்களுக்கு, தேர்வர்கள் sbi.co.in எஸ்பிஐ அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பாலோ செய்யுங்கள்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d