மலையாளத்தில் வெளியான சவுதி வெள்ளக்கா (Saudi Vellaka) படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

‘ஆப்ரேஷன் ஜாவா’ மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் தருண் மூர்த்தியின் 2வது திரைப்படம் இந்த ‘சவுதி வெள்ளக்கா’.தேவி வர்மா, லுக்மான் அவரன், பினு பப்பு, தன்யா அனன்யா, சுஜித் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். பாலி ஃபிரான்சிஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கதை
கொச்சினின் நெருக்கடியான குடியிருப்புப் பகுதி சவுதி காலனி. அங்கு இருக்கும் மூதாட்டி ஆயிஷா ராவுத்தர் வீட்டிற்கும் அருகில் வசிக்கும் அந்த பணக்கார வீட்டிற்கும் இடையே குட்டி குட்டி சண்டைகள் நடக்கிறது. ஒரு நாள் சிறுவன் அபிலாஷ் கிரிக்கெட் ஆடும்போது அவன் அடித்த ஷாட்டில், காயம்படுகிறார் ஆயிஷா ராவுத்தர். இதனால் கோபமடைந்த அவர், சிறுவன் அபிலாஷை அடித்து விடுகிறார். அபிலாஷின் பெற்றோர் ஆயிஷா ராவுத்தர் மீது வழக்கு தொடுக்கின்றனர். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
விமர்சனம்
இந்த படத்தில் தருண் மூர்த்தியின் ரைட்டிங் மிகப்பெரிய பலம். காட்சிகளை தத்ரூபமாக வருவதற்கு அவரது ரைட்டிங்கை பாராட்டியே ஆக வேண்டும். மலையாள சினிமாவில் வெளியான மிகச்சிறந்த டிராமா படங்களில் இதுவும் ஒன்று.
இந்த படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. ஆனால் அந்த குறை தெரியவில்லை. அந்த அளவுக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மூதாட்டிஆயிஷா ராவுத்தராக வரும் தேவி வர்மா. மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மூதாட்டியின் மகன், சிறுவன், குடும்பத்தார், வழக்கறிஞர் என படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஷரத் வேலாயுதனின் கேமரா ஒர்க்கை பாராட்டியே ஆக வேண்டும், கொச்சியை மிகவும் அழகாக எதார்த்தமாக காட்சிபடுத்தியிருப்பார். மிகவும் சீரியஸான இந்த படத்தில் வரும் சின்ன சின்ன ஹியூமர் சீன்களும் அழகாக ஒர்க் அவுட் ஆயிருக்கிறது. பெரிய நடிகர்களோ, விளம்பரமோ இல்லாமல் அமைதியாக வெளியான இந்த அருமையான ‘சவுதி வெள்ளக்கா’ திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் உள்ளது. இந்த படம் இணைய தலைமுறையின் Must Watch recommendation.
2022 ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சிறந்த படம் இது. மெலோ டிராமா படம் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த படம் மிகவும் பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இணைய தலைமுறை ரேட்டிங்: 4/5