சனி பெயர்ச்சி பலன் 2023: ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்

Reading Time: < 1 minute

இன்று சனி பெயர்ச்சி 2023 விழா நடைபெறுவதை முன்னிட்டு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு செய்து செய்து வருகின்றனர்.

சனி பெயர்ச்சி 2023

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி இன்று சனிபகவான் மகர ராசியிலிருந்து  கும்ப ராசிக்கு செல்கிறார், சனி கும்ப ராசியில் நுழைவதால் தனுசு ராசியினர் ஏழரை சனியிலிருந்து விடுபடுவார்கள் அதேசமயம் மீனம் ராசியினருக்கு ஏழரை சனி தொடங்கியுள்ளது.இந்த நிலையில் இன்று சனீஸ்வரன் பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

திருநள்ளாறு கோவிலில் பக்தர்கள் பெரும் திரளாக சாமி தரிசனம் செய்ய வந்தனர். வழக்கமாக சனிக்கிழமைகளில் எந்த அளவு கூட்டம் இருக்குமோ அந்த அளவி பக்தர் வந்தனர்.

சனிப்பெயர்ச்சி பலன்கள்

2023 – 2026 வரையிலான சனிப்பெயர்ச்சி பலன்கள் தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்

திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காடில் உள்ள பொங்கு சனீஸ்வரர் கோவில் பக்தர்கள் குவிந்தனர், இந்த பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை சனிப்பெயர்ச்சிக்கான பரிகாரத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது.

அந்த வகையில் இன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நடைபெறுவதால் பொங்கு சனீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது மேலும் ஆலய தலைவிருட்சமான வன்னி மரத்தின் கருப்பு துணியில் தேங்காய் வாழைப்பழம் எள்ளு உள்ளிட்ட பொருட்களை கட்டி பொங்கு சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d