ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்து வெளியாகியுள்ள ‘மைக்கேல்’ படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

கதை
மொத்த சிட்டியையும் கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஒரு டான். அவரை கொலை செய்யவரும் கும்பலிடம் இருந்து அவரை காப்பாற்றும் ஹீரோ. அதில் அந்த டானுக்கு அவரை பிடித்து போக ஹீரோவை கூடவே வைத்திருக்கிறார். அவருக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார் அதில் அவர் ஜெயித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
விமர்சனம்
’புரியாத புதிர்’ ,’இஸ்பேட்ட ராஜா இதய ராணியும்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள கேங்ஸ்டர் டிராமா படம் ’மைக்கேல்’. தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மாநகரம் படத்திற்கு பின் சந்தீப் கிஷன் தனது கேரக்டரை மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களது பங்கை சரியாக செய்துள்ளனர். கிரண் கெளசிக் விசுவல்ஸ் படத்திற்கு தேவையான ரிச்சான லுக்கை கொடுக்கிறது. சாம் சி.எஸ் பாடல் மற்றும் பிண்ணனி இசை வழக்கம் போல படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
மிகவும் பழைய கதைகளத்தை எடுத்து மீண்டும் ஒர்க் ஆகாத ஒரு படத்தை எடுத்துள்ளனர். படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் ஈசியாக பிரடிக்ட் செய்வது போல் உள்ளது மிகப்பெரிய பிரச்னை. சண்டை காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை தன்மை இருந்திருந்தால் ஒர்க் ஆகியிருக்கலாம்.
சந்தீப் கிஷன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் இந்த படத்தின் காட்சி மற்றும் கதைக்களத்தில் முண்ணனி மாஸ் ஹீரோக்களுக்கான பில்டப் காட்சிகள் இருப்பதால், அவருக்கு அந்த அளவு செட் ஆகவில்லை. மொத்தமாக படம் எப்படி இருக்கு என்று கேட்டால் வழக்கமாக நாம் பார்த்து பழகிய கேங்ஸ்டர் கதை கொஞ்சமும் செட் ஆகாத நடிகர்களை வைத்து எடுத்துள்ளனர்.
இணைய தலைமுறை ரேட்டிங்: 2.25/ 5