Samsung Galaxy A34 எவ்வளவு விலை, வசதிகள் என்ன?

samsung a34 price
Reading Time: < 1 minute

Samsung Galaxy A34 மாடல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூ. 30,000 என்று நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

samsung a34 price

சாம்சங் விரைவில் கேலக்ஸி ஏ சீரிஸில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் விரைவில் கேலக்ஸி ஏ 34 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்க எஃப்.சி.சி மற்றும் இந்திய பி.ஐ.எஸ் உள்ளிட்ட பல பட்டியலிடப்பட்ட வெப்சைட்டுகளில் உள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ 34 ஒரு மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை விலை ரூ.30,000 க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரியன், ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் MediaTek Dimensity 1080 ப்ராசஸரை கொண்டிருக்கும், மற்ற இடங்களில் Exynos 1280 chipset ப்ராசஸரை கொண்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அமோலேட் திரையுடன் வரும் என்று கூறப்படுகிறது. டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் இருக்கும். சாம்சங் கேலக்ஸி ஏ 34 பின்புறத்தில் கேமரா பம்ப் இல்லாமல் சிம்பிளான டிசைனில் வருகிறது. கிளாரிட்டியான போட்டோ, வீடியோக்களுக்கு 48MP முன் பக்க கேமரா, 13MP பின்பக்க கேமராவை கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ34 ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. in-display fingerprint ஸ்கேன்னர் வசதி இருக்கும். சமீபத்தில், சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ 14 5 ஜி மற்றும் கேலக்ஸி ஏ 23 5 ஜி என்ற இரண்டு புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் இப்போது வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ 14 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499 ஆகவும், கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் விலை ரூ.22,999 மற்றும் ரூ.24,999 ஆகவும் உள்ளது. இந்த மொபைல் போன்கள் ஆன்லைன் மற்றும் சாம்சங் ஸ்டோரில் விற்பனைக்கு உள்ளன.

டிரெண்டிங் மொபைல்கள்

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d