ரியல்மி பிராண்ட்க்கு இந்தியாவில் வரவேற்பு இருக்கிறது, காரணம் அதனுடைய பட்ஜெட் குறைந்த விலை சிறந்த டெக்னாலஜி இருப்பதால்தான். இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்க, ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்தான் இப்போ டிரெண்டிங்.

முக்கியமா இத 5ஜி போன்… இனிமே 5ஜி தான் டாப் டெக்னாலஜி அப்டீங்கறதால இந்த பட்ஜெட் போனுக்கு நல்ல வரவேற்பு..
விலை
4ஜிபி ரேம் – 64 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி போன் – ரூ.13,999 மட்டுமே…
4ஜிபி ரேம் – 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி போன் – ரூ.14,999 மட்டுமே…
8ஜிபி ரேம் – 128 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி போன் – ரூ.16,999 மட்டுமே…
என்னென்ன வசதிகள்?
இந்த மாடல் மொபைலுக்கு ரியல்மி டிஸ்ப்ளேக்கு ரொம்ப கவணம் செலுத்தியிருக்காங்க.. ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே. 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட். திரைப்படம், கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு அருமையாக இருக்கும்
ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என
மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் குவிக் சார்ஜ் உள்ளது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.
பட்ஜெட் விலையில் 5ஜி ஆதரவு, 48எம்பி கேமரா, ஒரு பெரிய டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, தனித்துவமான நிறங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வழங்குகிறது ரியல்மி 8 5ஜி சாதனம். 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ்.