பி.டி.ஆர் இலாகா மாற்றம்: வைகை செல்வன் விமர்சனம்

Reading Time: < 1 minute

பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் உண்மை என்பதால் தான் அவருக்கு டம்மியான இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி திமுகவின் லட்சணம் என அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

அதிமுக பொது செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் 69 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி நலம் பெற வேண்டி சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் கலந்துகொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தார். பின் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினர். உடன் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் உட்பட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைகை செல்வன் முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் அத்து மீறி சென்று விட்டார் சொல்லதிகாரம், பொருள் அதிகாரம் போன்று கல் எரிகாரம் என்பதால் அவர் மீது உள்ள அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு அரணாக இருப்பதாக சொல்லிவிட்டு ஒரு இஸ்லாமியர் மீது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் வேறொரு இஸ்லாமியர்களுக்கு பதவி அளிக்கப்படவில்லை.


தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள டிஆர்பி ராஜா குடும்ப அரசியலுக்கு எடுத்துக்காட்டு, அவர்களுக்கு பல தொழிற்சாலைகள், சாராய தொழிற்சாலைகள் உள்ளன ஆகையால் ஆவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் உண்மை என்பதால் தான் அவருக்கு டம்மியான இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி திமுகவின் லட்சணம் என கூறினார்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d