PS 5 Slim & PS 5 Pro மாடல்களில் என்ன எதிர்பார்க்கலாம்?

Reading Time: 2 minutes

வீடியோ கேம் பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ், பிஎஸ் 5 ஸ்லிம் மற்றும் பிஎஸ் 5 ப்ரோ அடுத்த வருடம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடல்களில் உள்ள அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிளேஸ்டேஷன் 4 ஹார்ட்வேர் அப்டேட் ஆக கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் ஆனது. நவம்பர் 2013 இல் அந்த கன்சோலின் அறிமுகத்தைத் தொடர்ந்து, பிளேஸ்டேஷன் 4 ஸ்லிம் மற்றும் பிளேஸ்டேஷன் 4 ப்ரோ இரண்டும் செப்டம்பர் 2016 ல் அறிமுகம் செய்யப்பட்டது. பிளேஸ்டேஷன் 3ம் இதே போல 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, 2009 ஆம் ஆண்டில் ஸ்லிம் மூன்று ஆண்டுகள் இடைவெளியில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதனால் சோனி, 2023 ம் ஆண்டு பிளேஸ்டேஷன் 5 ப்ரோ மற்றும் ஸ்லிம் மாடலை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. PS5 Slim சிப் ஃபேப்ரிகேஷன் தொழில்நுட்பத்துடன் காம்பேக்ட் டிசைனில், குறைந்த விலையில் அறிமுகம் ஆகலாம். PS5 ப்ரோ அதிக தெளிவுத்திறன் ( higher resolutions )மற்றும் பிரேம் வீதங்களைக் (frame rates) கொண்டு வெளிவரலாம்.

Credits: Sony

பிஎஸ் 5 ஸ்லிம்: இதுவரை வெளிவந்த தகவல்கள்

பிஎஸ் 5 மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின, ஆனால் அது பிஎஸ் 5 ஸ்லிம் ஆக இருக்காது. இருப்பினும், அளவு மற்றும் எடையைக் குறைப்பதே குறிக்கோள். பிஎஸ் 5 ஸ்லிம் லைட் வெயிட், சிறிய மற்றும் அதிக திறன் கொண்ட சிபியூ வை கொண்டதாகும். இதனால் பவர் கன்செப்சனும் குறையும். மேலும் இது வெர்ட்டிகலாக எந்த ஒரு ஸ்டாண்டும் இல்லாமல் நிற்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அடுத்த வருடத்தின் இரண்டாவது குவாட்டரில் உற்பத்தி தொடங்கும், மூன்றாவது குவாட்டரில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

பிஎஸ் 5 ஸ்லிம் vs பிஎஸ் 5

பிளேஸ்டேஷன் 5 கன்சோல் ஏற்கனவே சில மாற்றங்களைக் கண்டுள்ளது. ஃபார்ம்வேர் அப்டேட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டை கொடுக்கும் திறன் மேம்படுத்தியது, ஹார்ட் வேர் அப்டேட் செய்யப்பட்டது. ஒரு ஸ்லிம் மாடல் எடை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது.

சோனி டிஸ்க் டிரைவ் பதிப்பை முற்றிலுமாக கைவிட்டு, எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் போலவே முழுமையாக பதிவிறக்கம் செய்யக்கூடிய முறையை கொண்டிருக்கும். கன்சோலின் வாழ்நாளை இது எந்த வகையில் பாதிக்கும் என்று காத்திருந்து பார்க்கலாம்.

முந்தைய பிளேஸ்டேஷன் மாடல்களில் ஒரிஜினல் மற்றும் ஸ்லீம் பதிப்புகளுக்கு இடையில் நிறைய மாற்றங்கள் இருந்தன. இந்த முறை சோனி எந்த மாதிரி மற்றங்களை ஸ்லிம் மாடலில் கொண்டுவர உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பிஎஸ் 5 vs பிஎஸ் 5 ப்ரோ

பிஎஸ் 5 ப்ரோ அதிக கிளாரிட்டியுடன் 4K தொழில்நுட்பத்துடன் வெளி வருகிறது. கேம் கடினமான கிராபிக்ஸில் ரன் ஆகும் போதும் உடையாமல் 60 எஃப்.பி.எஸ் பிரேம் விகிதத்தில் இயங்கும். பிஎஸ் 5 இன் தற்போதைய eight core ர் சிபியு 2019 ஆம் ஆண்டிலிருந்து ஏஎம்டியின் zen 2 கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய zen4 அதிக செயலாக்க திறன் மற்றும் அதிகரித்த ஆற்றல் செயல்திறனை கொண்டது.

16 ஜிபி shared memory எஸ்.எஸ்.டி.யைத் தொந்தரவு செய்யாமல் கூடுதல் தகவல்களைச் சேமிக்க உதவும், ரேம் இயங்குவது போன்ற வேகத்தில் இயங்காது. அதிக செயல்திரன், கூடுதல் ஸ்டோரேஜ், மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் அப்டேட்டுகளுடன் இந்த கன்சோல் வெளியாக உள்ளது.

மேலும் பிஎஸ் 5 ப்ரோ உடன் புதிய கண்ட்ரோல்லர் அறிமுகம் ஆக உள்ளதாக தெரிகிறது. இப்பொழுது விற்கப்படும் கண்ட்ரேல்லர்களுடன் அதிக விலை இருக்க வாய்ப்பு உள்ளது. சுப்பீரியர் மெக்கானிக்கல் பட்டன், அனலாக், பேட் இண்டர்சேஞ்ச், பெட்டர் வைப்ரேஷன் போன்ற வசதிகள் இதில் இருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த பிஎஸ் 5 ஸ்லிம் vs பிஎஸ் 5 ப்ரோ என்ன விலையில் அறிமுகம் செய்யப்படும், மேலும் என்னென்ன புதிய வசதிகள் என்பது வெளியானதும் இந்த பதிவில் அப்டேட் செய்கிறோம்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: