பிரதோஷ விரதம் | பிரதோஷ பூஜை 2023

Reading Time: 3 minutes

பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

பிரதோஷ விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் ஒன்றில் வரும் சனிப்பிரதோஷ நாளில் விரதத்தை தொடங்கலாம்.

பிரதோஷ வரலாறு

தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. உலகை அழிக்க வல்ல அந்த விஷத்தை, சிவபெருமான் அருந்தினார். அது அவரது கழுத்திலேயே நின்றுபோனது. விஷத்தின் தாக்கத்தால் மயங்கி, பின்னர் விஷத்தின் தாக்கத்திலிருந்து மீண்ட ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே ஆனந்த நடனம் ஆடி, அருளினார். அதுவே ‘பிரதோஷம்’ எனப்படுகிறது. இதற்கு ‘தோஷம் இல்லாத நேரம்’ என்று பொருள் கொள்ளலாம்.

சிவ வழிபாடு

பிரதோஷ காலத்தில் சிவனை வலமும், இடமும் மாறி மாறி வந்து ஈசனை வணங்க வேண்டும் சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள்.சோம சூக்தப் பிரதட்சணம் என்பது பிரதோச நாளில் சிவாலயத்தினை வலம் வரும் முறையாகும். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள். இம்முறையிலேயே சிவாலயங்களில் பிரதோசக் காலங்களில் வலம் வருகிறார்கள்.

god sivan

பிரதோஷ பூஜை

பிரதோஷ காலத்தில், நந்திக்கும், சிவபெருமானுக்கும் அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்படும். பின்னர் நந்தி வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியும் அமர்ந்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதே பிரதோஷ பூஜையாகும். அப்படி வலம் வரும் நேரத்தில் வேதங்களை பாராயணம் செய்தும், நாதஸ்வரம் இசைத்தும் இறைவனை வணங்குவார்கள்.

பிரதோஷ விரத நாட்கள் 2023

ஜனவரி 4
புதன்

பிரதோஷ பூஜை நேரம் : Jan 04, 5:50 PM – Jan 04, 8:30 PM
ஜனவரி 19
வியாழன்
பிரதோஷ பூஜை நேரம் : Jan 19, 6:00 PM – Jan 19, 8:39 PM
பிப்ரவரி 2
வியாழன்
பிரதோஷ பூஜை நேரம் : Feb 02, 6:10 PM – Feb 02, 8:46 PM
பிப்ரவரி 18
சனி
பிரதோஷ பூஜை நேரம் : Feb 18, 6:20 PM – Feb 18, 8:52 PM
மார்ச் 4
சனி
பிரதோஷ பூஜை நேரம் : Mar 04, 6:27 PM – Mar 04, 8:55 PM
மார்ச் 19
ஞாயிறு
பிரதோஷ பூஜை நேரம் : Mar 19, 6:33 PM – Mar 19, 8:57 PM
ஏப்ரல் 3
திங்கள்
பிரதோஷ பூஜை நேரம் : Apr 03, 6:39 PM – Apr 03, 8:59 PM
ஏப்ரல் 17
திங்கள்
பிரதோஷ பூஜை நேரம் : Apr 17, 6:44 PM – Apr 17, 9:01 PM
மே 3
புதன்
பிரதோஷ பூஜை நேரம் : May 03, 6:51 PM – May 03, 9:04 PM
மே 17
புதன்
பிரதோஷ பூஜை நேரம் : May 17, 6:57 PM – May 17, 9:07 PM
ஜூன் 1
வியாழன்
பிரதோஷ பூஜை நேரம் : Jun 01, 7:04 PM – Jun 01, 9:12 PM
ஜூன் 15
வியாழன்
பிரதோஷ பூஜை நேரம் : Jun 15, 7:09 PM – Jun 15, 9:16 PM
ஜூலை 1
சனி
பிரதோஷ பூஜை நேரம் : Jul 01, 7:12 PM – Jul 01, 9:19 PM
ஜூலை 15
சனி
பிரதோஷ பூஜை நேரம் : Jul 15, 7:11 PM – Jul 15, 9:20 PM
ஜூலை 30
ஞாயிறு
பிரதோஷ பூஜை நேரம் : Jul 30, 7:06 PM – Jul 30, 9:17 PM
ஆகஸ்ட் 13
ஞாயிறு
பிரதோஷ பூஜை நேரம் : Aug 13, 6:57 PM – Aug 13, 9:11 PM
ஆகஸ்ட் 28
திங்கள்
பிரதோஷ பூஜை நேரம் : Aug 28, 6:44 PM – Aug 28, 9:02 PM
செப்டம்பர் 12
செவ்வாய்
பிரதோஷ பூஜை நேரம் : Sep 12, 6:30 PM – Sep 12, 8:51 PM
செப்டம்பர் 27
புதன்
பிரதோஷ பூஜை நேரம் : Sep 27, 6:15 PM – Sep 27, 8:40 PM
அக்டோபர் 11
புதன்
பிரதோஷ பூஜை நேரம் : Oct 11, 6:01 PM – Oct 11, 8:30 PM
அக்டோபர் 26
வியாழன்
பிரதோஷ பூஜை நேரம் : Oct 26, 5:49 PM – Oct 26, 8:21 PM
நவம்பர் 10
வெள்ளி
பிரதோஷ பூஜை நேரம் : Nov 10, 5:40 PM – Nov 10, 8:16 PM
நவம்பர் 24
வெள்ளி
பிரதோஷ பூஜை நேரம் : Nov 24, 5:36 PM – Nov 24, 8:15 PM
டிசம்பர் 10
ஞாயிறு
பிரதோஷ பூஜை நேரம் : Dec 10, 5:37 PM – Dec 10, 8:18 PM
டிசம்பர் 24
ஞாயிறு
பிரதோஷ பூஜை நேரம் : Dec 24, 5:43 PM – Dec 24, 8:24 PM

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: