பாண்டிச்சேரியில் மிஸ் பண்ணக்கூடாத சில இடங்கள்

Reading Time: 3 minutes

பாண்டிச்சேரி என்றாலே கடற்கரை, காந்தி சிலை, பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் மாத்ரி மந்திர் இவை மட்டும்தான் சுற்றுலாத்தளங்கள் என அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள்.


ஆரோவில் மாதிரி மந்திர் தவிர்த்து மேற்கண்ட அனைத்து இடங்களும் 100 முதல் 200 மீட்டருக்கு உள்ளேயே முடிந்து விடுவதால் பாண்டிச்சேரி பார்க்க வேறு இடங்களளே இல்லையா என ஆர்வமிகுதியில் கேட்பார் சுற்றுலா பயணிகள்.குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் மகிழ்விக்கும் விதமாக இருக்கும் இடங்கள் சிலவற்றை பார்ப்போம்.

ஊசுடு ஏரி

புதுச்சேரியில் இருந்து 10 கிலோ மீட்டரில் வழுதாவூர் சாலையில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த ஏரி. புதுச்சேரியில் மிகப்பெரிய ஏரியான இது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏரியில் நீர், குளுகுளுவென்று காற்று என அனைத்தும் மனதை கொள்ளை கொள்ளச் செய்யும். சறுக்கு மரம், ஊஞ்சல் என குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் உண்டு. ஏரியின் கரைகளில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து ரம்யமான சூழலையும், கலர் கலரான பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம். படகு சவாரி உண்டு என்பதால் ஏரியை முழுவதுமாக வலம் வரலாம். புதுச்சேரி செல்லும் பேருந்துகளில் 30 நிமிட பயணத்தில் ஊசுடு ஏரியை அடையலாம்.

சுண்ணாம்பாறு படகு இல்லம்

புதுச்சேரி கடலூர் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆறு கடலில் கலக்கும் இடம் அமைந்திருக்கும் சிறிய தீவு போன்ற இடம்தான் பாரடைஸ் பீச். பத்து நிமிட படகு சவாரியில் அந்த தீவின் அழகை ரசிக்கலாம். சுற்றுலாத்துறையின் ஹோட்டல் அங்கேயே இருப்பதால் உணவுக்கு பிரச்சனை இல்லை வகை வகையான உணவுகளை ருசி்க்கலாம்.
மாலை 6 மணிக்கு மேல் செல்ல அனுமதி கிடையாது. இங்கு மற்றொரு சிறப்பம்சம் மிதக்கும் படகு வீடு. 3 ஏசிஅறை கொண்ட இந்த படகு வீடு பகல் முழுவதும் பீச்சை சுற்றி வந்து இரவில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். அதனுள்ளேயே உணவு, குளிர்பானங்கள் உள்ளிட்ட அனைத்தும் உண்டு. புதுச்சேரி- கடலூர் செல்லும் பேருந்துகளில் பத்து நிமிடம் பயணித்தால் சுண்ணாம்பாறு படகு இல்லத்தை அடையலாம்.

தாவரவியல் பூங்கா

இந்தியாவின் சிறந்த தாவரவியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. மீன் காட்சியகம் இசைக்கு ஏற்ப நடனமாடும் நீரூற்று, ஏப்ரல் மே மாதங்களில் செல்பவர்கள் பாரிஜாதம் மற்றும் செண்பக மரங்கள் பூக்கும் பூக்களின் நறுமணத்தை உணரலாம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இங்கு வேளாண்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த பூங்காவிற்கு, ரயில் நிலையத்தில் இருந்து நடந்தே செல்லலாம்.

அரிக்கன்மேடு

உலக தொல்பொருள் வரலாற்றில் தவிர்க்கவே முடியாதது அரிக்கமேடு. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் காக்காயன் தோப்பில் அமைந்துள்ளது. அரியாங்குப்பம் கடற்கரையோரம் ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது அரிக்கமேடு. இந்த பகுதியை சுற்றி சுமார் 23 ஏக்கர் பரப்பளவை கையகப்படுத்தி இருக்கிறது தொல்லியல் துறை. சோழர்களுக்கும் ரோமானியர்களும் இடையேயான மிகப்பெரிய வாணிபத் தளமாக விளங்கியது இந்த பகுதி. ரோமானியப் பேரரசன் உருவம் பதித்த தங்க நாணயம் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரோமானியர்கள் தொழில் தொடர்பு கொண்ட பொருட்கள் கிடைக்கும் ஒரே இடம் என்பதால் அயல் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதல் சாய்ஸாக இருக்கிறது இந்த இடம்.

சண்டே மார்க்கெட்

புதுச்சேரியில் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று சண்டே மார்க்கெட்.
சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள மகாத்மா காந்தி வீதியில் இயங்கும் இந்த சந்தை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டுமே இருக்கும்.


காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை, பெண்களுக்கான நவநாகரிக உடை வகைகள், அழகு சாதனப் பொருட்கள், இங்கு மிக மிகக் குறைவான விலையில் கிடைக்கும். 500 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போன், 50 ரூபாய்க்கு ஐ போன் சார்ஜர் கிடக்கும். 200 முதல் 500 வருட பழமையான பொருட்கள் கூட இங்கே சர்வ சாதாரணமாக குறைந்த விலையில் கிடைப்பதால், வெளிநாட்டவரும், அண்டை மாநிலத்தவர் இந்த வீதியில் நடந்து கொண்டிருப்பார்கள். குழந்தைகள் பெரியவர்களான ஆடைகள், பழைய எலக்ட்ரிக் பொருட்கள், இருசக்கர வாகன உதிரி பாகங்கள், என அனைத்தையும் இங்கே வாங்கிவிடலாம். அடுத்த முறை செல்லும்போது இந்த இடங்கள் அனைத்தையும் பார்ப்பதற்கு மிஸ் செய்து வீடாதீர்கள்.

Leave a Reply

WP Radio
WP Radio
OFFLINE LIVE
%d bloggers like this: