2023 ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி தமிழ்நாட்டில் 9ஆவது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5வயது உட்பட்ட குழந்தைகளுக்கு பிப்ரவரி 27ம் தேதி வழங்க உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. போலியோ என்றால் என்ன? அது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

போலியோ என்றால் என்ன?
இளம்பிள்ளை வாதம் என்ற போலியோமைலிட்டிஸ் ஒரு கடுமையான தொற்று நோய். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட இளம் குழந்தைகளை இது பாதிக்கிறது. இந்த வைரஸ், மனிதரில் இருந்து , மலம் அல்லது வாய் நீர்மங்கள் வழி பெரும்பாலும் பரவுகிறது. அசுத்த நீர் அல்லது உணவு போன்றவற்றில் இருந்து அதிகம் பரவ வாய்ப்பு இல்லை. இது குடலில் பெருகி நரம்பு மண்டலத்தை அடைந்து வாதத்தை உருவாக்குகிறது.
நோய் அறிகுறிகள்
- காய்ச்சல்
- களைப்பு
- தலைவலி
- வாந்தி
- கழுத்து வீக்கம்
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 200-ல் ஒரு நபருக்கு தொற்று, குணப்படுத்த முடியாத வாதமாக மாறுகிறது (பொதுவாகக் கால்). மூச்சு மண்டலத் தசை செயல் இழப்பதால் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 5-10% பேர் இறந்து போகின்றனர்.

தடுப்பு
போலியோ நோயை சிகிச்சையால் குணப்படுத்த முடியாது. என்றாலும் பாதுகாப்பான பலனளிக்கும் தடுப்பு மருந்து உள்ளது. பன்முறை அளிக்கப்படும் போலியோ தடுப்பு மருந்து ஒரு குழந்தையை ஆயுள் முழுவதும் காக்கிறது. ஆகவே உலகில் போலியோ பரவல் முழுவதுமாக இல்லாமல் போகும் வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்து அளித்து வருவதே போலியோவை ஒழிக்கும் உத்தி. இந்த தொற்றைத் தடுக்க இரண்டு வகையான தடுப்பு மருந்துகள் உள்ளன:
- வாய் வழிப் போலியோ தடுப்பு மருந்து (OPV): இந்த தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு வாய்வழி அளிக்கப்படும். பின், 6, 10, 14 வது வாரங்களில் முதன்மையாகவும், 16-24 மாத வயதில் ஒரு வேளை ஊக்க மருந்தாகவும் அளிக்கப்படும்.
- போலியோ தடுப்பூசி (IPV): இது உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் மூன்றாவது வேளை டிபிடி யுடன் கூடுதல் வேளை மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
2023ம் ஆண்டு கொரோனா சொட்டு மருந்து முகாம் தேதி
2023ம் ஆண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 9வது மாதம் முதல் 12 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை தாய்மார்கள் தங்களது குழந்தைக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு சுகாதார துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து பிப்ரவரி 27ம் தேதி வழங்கப்பட உள்ளதாக முந்தைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.