போக்கோ எக்ஸ் 5 ப்ரோ (Poco X5 pro) ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் வசதிகள் குறித்து பார்க்கலாம்.

போக்கோ தலைமை நிர்வாக அதிகாரி ஹிமான்ஷு டாண்டன் சமீபத்தில் போகோ எக்ஸ் 5 சீரிஸ் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார். புதிய போக்கோ X5 ப்ரோ அம்சங்கள் ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் மாடலில் வழங்கப்பட்ட அம்சங்களுடன் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் Xiomi நிறுவனம் ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. போக்கோ X5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் போக்கோ X5 ப்ரோவாக அறிமுகமாக உள்ளது.
போக்கோ X5 ப்ரோ: எதிர்பார்ப்புகள்
- போக்கோ எக்ஸ் 5 ப்ரோ 6.67 இன்ச் FHD+ OLED திரையை கொண்டிருக்கும். இது HDR10+ 10802400 ரெசலுயூசன் கொண்டிருக்கலாம் மற்றும் 120Hz வரை தகவமைப்பு புதுப்பிப்பு விகிதங்களை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 ஜி செயலி உள்ளது. இது 512 ஜிபி வரை இன்டர்னல் மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் கொடுக்கப்படலாம்.
- வரவிருக்கும் போக்கோ மாடலில் 5,000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும். இது 67 W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் வருகிறது.
- போக்கோ X5 ப்ரோவில் போட்டோ, வீடியோ எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
- இந்த மொபைலின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது. 8 எம்பி ஏஐ முதன்மை கேமராவுடன் இணைக்கப்பட்ட இரண்டாவது சென்சார் உள்ளது. பின் புற கேமராக்களில் வினாடிக்கு 30 பிரேம்களில் 1080P கிளாரிட்டியில் படங்களைப் பிடிக்க முடியும்.